செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2016 (13:41 IST)

குருப் பெயர்ச்சி பொதுப்பலன் (02.08.2016 முதல் 01.09.2017 வரை)

நிகழும் துன்முகி வருடம் ஆடி மாதம் 18ம் தேதி செவ்வாய்க்கிழமை (02.08.2016) கிருஷ்ண பட்சத்து அமாவாசை திதி மேல்நோக்குள்ள பூசம் நட்சத்திரம், ஸித்தி நாமயோகம், சதுஷ்பாத நாமகரணம், நேத்திரம், ஜீவனம் மறைந்த சித்தயோகத்தில், புதன் ஹோரையில் இரண்டாம் ஜாமத்தில் பஞ்ச பட்சியில் ஆந்தை துயில் கொள்ளும் நேரத்திலும், தட்சிணாயனப் புண்ய கால கிரிஷ்மருதுவில் காலை மணி 9.24க்கு கன்யா லக்னத்தில் பிரகஸ்பதி எனும் தேவ குருவாகிய வியாழபகவான் சிம்ம ராசியிலிருந்து உபய வீடான கன்னி ராசிக்குள் சென்று அமர்கிறார். 01.09.2017 வரை இங்கமர்ந்து தன் அதிகாரத்தை வெளிப்படுத்துவார்.
 

 
காலங்கள் மாறினாலும், காட்சிகள் மாறினாலும் தன் கோலத்தையும் குணத்தையும் மாற்றிக்கொள்ளாமல் பாரத பண்பாடு, கலாச்சாரத்தை உடும்புப் பிடியாய் பிடித்து வாழ்பவர்களின் உள்ளத்தில் இருப்பவர் இந்த குருபகவான் தான். லஞ்ச லாவண்யம், வரதட்சணை, மது, பொய்புரட்டு சூழ்ந்த சமூகத்தில் வாழ்ந்தாலும் அவற்றால் பாதிக்காது. நேர்மையாகவும் பிறர்சொத்துக்கு ஆசைப்படாமலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் வாழ வைப்பவரும் இந்த குருபகவான் தான். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை காட்டி உண்மைக்கு புறம்பாய் செயல்படத் து£ண்டும் பண முதலைகளுக்கு அடிமையாகாமல் சட்டம் ஒழுங்கை காத்து சாதாரண மக்களின் நலன் கெடாமல் செயல்படும் அரசு அதிகாரிகளின் கண்ணியத்தில் வாழ்பவர் இந்த குருபகவான்.

யோகா, தியானம், பிற மதத்தினரை காயப்படுத்தாத துறவறம், மந்திரங்கள், வேதங்கள், உபநிடதங்கள், புராண இதிகாசங்கள், கல்விக்கூடங்கள், வங்கிகள் இங்கெல்லாம் ஆட்சி செய்பவர் இந்த குருபகவான். ரத்தத்தை உறையவைக்கும் பனிக்கட்டியிலும், ஆலங்கட்டி மழையிலும், மண்டையை பிளக்கும் கடும் வெயிலிலும், சூறாவளி புயல் காற்றிலும் நின்று கொண்டு எதிரியின் ஏவுகணை, பீரங்கி, எறிகுண்டு, வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு இவற்றிற்கெல்லாம் அஞ்சாமல் பெற்றோர் மற்றும் மனைவி, பிள்ளைகளையும் மறந்து நாட்டின் எல்லைக் கோட்டில் நின்று தேசத்தைக் காத்துக் கொண்டிருக்கும் இராணுவ வீரர்களின் நாட்டுப் பற்றிலும், வீரத்திலும் நிறைந்து நிற்பவர் இந்த குருபகவான் தான். 
 
கடந்த ஓராண்டு காலமாக சிம்ம ராசியில் அமர்ந்து அரசியலில் பல விளையாட்டுகளை விளையாடினார். தங்கத்தின் விலையிலும் இறக்கம், ஏற்றங்களை அடிக்கடி ஏற்படுத்தினார். கல்வியிலும் காலை ஊன்றி மருத்துவக் கல்வியில் நேர்முகத் தேர்வாய் வெளிப்பட்டார்.
 
02.08.2016 முதல் 01.09.2017 வரை உள்ள காலக்கட்டத்தில் வித்யாகாரகன் புதன் வீடான கன்னியில் அமர்வதால் இப்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்கள் இனி மாறும். மாணவர்கள் மனப்பாடம் செய்து வினாக்களுக்கு விடையளிக்கும் போக்கு மாறும். சொந்தமாக யோசித்து விடை எழுதும் முறை நடைமுறைக்கு வரும். இன்ஜினியரிங், மருத்துவ படிப்புக்கான பாடங்கள் நவீனமாகும். புகழ் பெற்ற கல்லூரி, பல்கலைக்கழகங்கள் பாதிப்புக்குள்ளாகும். மறந்து போன நம்நாட்டு அறிஞர்களின் படைப்புகள் கண்டுபிடிப்புகளுடன் அயல்நாட்டு அறிஞர்களின் கருத்துக்களும் பாடத்தில் இனி இடம் பெறும். மாணவர்களின் புத்தகச்சுமை குறையும். வேலையில்லாமல் இருக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கு உள்நாட்டிலேயே வேலைக் கிடைப்பதற்கு புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாலியல் சார்ந்த விழிப்புணர்வுகள் அதிகமாகும். சாஃப்ட்வேர் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் நம் நாட்டவரால் உலகிற்கு அறிமுகமாகும்.

அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட அளவிலும் சிறியதான கைப்பேசி, மடிக்கணிணி மற்றும் கணிணி வகைகள் சந்தையில் வெளியாகும். தகவல் தொழில்நுட்பத்துறை அசுரவளர்ச்சி அடையும். வானொலி, தொலைக்காட்சி மற்றும் நாள், வார, மாதப் பத்திரிக்கைகள் புதியன வெளியாகும். வைணவ ஸ்தலங்கள் வளர்ச்சியடையும். ணி,பி,ழி,ஷி,க்ஷி,ஙீ ஆகிய எழுத்துக்கள் பிரபலமடையும். 
 
குருபகவான் ஐந்தாம் பார்வையால் சனிவீடான மகர ராசியை பார்ப்பதால் வாகன உற்பத்தி அதிகரிக்கும். சுயதொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை உயரும் ஆனால் புகழ் பெற்ற பாரம்பரியமான குடும்பத்தின் வழிவந்த தொழிலதிபர்கள் பாதிப்படைவார்கள். அன்னிய முதலீடுகள் அதிகமாகும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பெரிய பதவியில் அமர்வார்கள்.
 
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகமாகும். புதிய கனிம, கரிம வளங்கள் கண்டறியப்படும். வாஷிங் மிஷின், ஏசி மிஷின் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை குறையும். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மழை மற்றும் இயற்கை வளங்களை கண்டறியக்கூடிய செயற்க்கைகோள்களை நம் நாட்டு அறிவியல் அறிஞர்கள் விண்ணில் செலுத்துவர். மலை, காடு செழிக்கும். வனவிளங்குகளின் எண்ணிக்கை அதிகமாகும்.
 
குருபகவான் ஏழாம் பார்வையால் தன் வீடான மீன ராசியை பார்ப்பதால் கப்பல் போக்குவரத்துத் துறை வளர்ச்சியடையும். பழைய துறைமுகங்கள் புதுபிக்கப்படும், புதிய துறைமுகங்கள் உருவாக்கப்படும். பள்ளி, கல்லு£ரி ஆசிரியர்களின் சம்பளம் உயரும். ஆனால் அவர்களை கட்டுப்படுத்தும் சட்டங்களும் நடைமுறைக்கு வரும். மத்திய அரசு ஊழியர்கள் புதிய சலுகைகளை பெறுவர்.

பவழ பாறை மற்றும் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க உலகளாவிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும். தரமான குடிநீர், தடையில்லா மின்சாரம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும். கிராமங்கள் வளர்ச்சியடையும். விவசாயிகளை பாதுகாக்கவும், மகசூலை அதிகப்படுத்தவும் மத்திய அரசு  புதிய சலுகைகளை அறிவிக்கும். பருவ  மழை தவறாத பொழியும்.  
 
குருபகவான் ஒன்பதாம் பார்வையால் ரிஷப ராசியை பார்ப்பதால் சொந்த வீடு வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். முகம், கண் சார்ந்த நோய்களுக்கு நவீன மருந்துகள் கண்டறியப்படும். கட்டுமானத்துறையை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும்.

ரியல் எஸ்டேட் 19.09.2016க்குப் பின் ஓரளவு சூடு பிடிக்கும். அதிநவீன குடியிருப்புகள் மற்றும் வர்த்தக மையங்கள் அதிகம் உருவாகும். ஆட்சியில் இருப்பவர்களுக்கும் நீதிபதிகளுக்குமிடையே கருத்து மோதல்களும், பனிப்போரும் அதிகரிக்கும். இளைஞர்கள் மத்தியில் அயல்நாட்டு மோகம் குறையும். அரசியலில் இளைஞர்களின் ஆதிக்கம் கூடும்.
 
குருபகவானின் நட்சத்திர பயணம்:
 
02.08.2016 முதல் 18.08.2016 வரை உத்திரம் 2ல்
19.08.2016 முதல் 04.09.2016 வரை உத்திரம் 3ல்
05.09.2016 முதல் 19.09.2016 வரை உத்திரம் 4ல் 
20.09.2016 முதல் 05.10.2016 வரை அஸ்தம் 1ல்
06.10.2016 முதல் 21.10.2016 வரை அஸ்தம் 2ல்
22.10.2016 முதல் 07.11.2016 வரை அஸ்தம் 3ல்
08.11.2016 முதல் 24.11.2016 வரை அஸ்தம் 4ல் 
25.11.2016 முதல் 16.12.2016 வரை சித்திரை 1ல்
17.12.2016 முதல் 16.01.2017 வரை சித்திரை 2ல் 
17.01.2017 முதல் 21.02.2017 வரை சித்திரை 3ல் துலாம்
22.02.2017 முதல் 07.04.2017 வரை சித்திரை 2ல் (வக்ரம்)
08.04.2017 முதல் 02.05.2017 வரை சித்திரை 1ல் (வக்ரம்)
03.05.2017 முதல் 27.06.2017 வரை அஸ்தம் 4ல் (வக்ரம்)
28.06.2017 முதல் 14.07.2017 வரை அஸ்தம் 4ல் 
15.07.2017 முதல் 10.08.2017 வரை சித்திரை 1ல்
11.08.2017 முதல் 01.09.2017 வரை சித்திரை 2ல் 
        
வக்ர காலம் - 22.02.2017 முதல் 27.06.2017 வரை
 
இந்த குருமாற்றம் மக்களிடையே பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் ஆர்வத்தையும், சுயதொழில் தொடங்கும் முனைப்பையும் தரும். முன்னெச்சரிக்கை உணர்வையும், தெய்வபக்தியையும் அதிகப்படுத்துவதாக அமையும்.
 
பரிகாரம்:
 
தர்க்கம், கல்வி, கலை, வர்த்தகத்திற்கு உரிய கிரகமான புதனின் வீட்டில் குரு அமர்வதால் பிரிந்து இருக்காமல் சேர்ந்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள். பழைய கல்வி நிறுவனங்களை புதுப்பிக்க உதவுங்கள். பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள். நீதிநெறி நூல்களை படிப்பதுடன் அவற்றை பரிசுப் பொருளாகவும் மற்றவர்களுக்கு வழங்குங்கள். கன்னி குருவின் அருட்பார்வை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.