சர்வதேச புத்தக கண்காட்சியில் ஓவியர் புகழேந்தியின் தமிழீழம்!

WD
1987ஆ‌ம் ஆண்டிலிருந்து ஆ‌ண்டுதோறு‌ம் நடைபெறும் சர்வதேச புத்தகவிழாவில் இம்முறை எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வெளியீட்டாளர்கள், விநியோகஸ்தர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், அனைவரையும் இணைத்து நடத்தப்படு‌கிறது. இவ்விழாவில் உலகில் பல்வேறு பாகங்களிலிருந்தும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்க்கப்படுகிறது.

திறமையான எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைத்தல், ஊக்குவித்தல், பரிமாறுதல், பரப்புதல் நோக்கங்களை கொண்டதாக இக்கண்காட்சி அமைய இருக்கிறது.

இக்கண்காட்சியில் வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் நூல் ஒன்றும் அறிமுகம் செய்து வைக்கப்படுவதுடன் விற்பனைக்கு வைப்பதற்கும் சர்வதேச புத்தக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.

FILE
ஓவியர் புகழேந்தி எழுதிய தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும் என்ற புத்தகம் தமிழ் ஆங்கிலம், பிரெ‌ஞ்‌ச், ஜேர்மனி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெனிவா சிவா எடிசன் நிறுவனம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

Webdunia|
25ஆவது சர்வதேச புத்தக கண்காட்சியும், விற்பனை விழாவும் இம்மாதம் 29ஆம் தே‌தி முதல் மே 3ஆம் தே‌தி வரை ஜெனிவா பலெக்ஸ்போ (Palexpo - Geneva) சர்வதேச மண்டபத்தில் நடைபெற உள்ளது.
பலெக்ஸ்போ ஜெனிவா சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழ் புத்தகம் ஒன்றின் மொழிபெயர்ப்பு அதுவும் ஈழத்தமிழர்கள் தொடர்பான புத்தகம் ஒன்று காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்படுவது இதுவே முதற்தடவையாகும். இப்புத்தகம் தொடர்பான கருத்துப்பகிர்வுகளும் இடம்பெற உள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :