Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

படுக்கையில் பெண்ணை வெல்ல சுலபான வழி....

Last Modified: புதன், 1 பிப்ரவரி 2017 (20:33 IST)

Widgets Magazine

உடலுறவு என்பது உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவான ஒன்று. அதில் இன்பத்தின் கடைசி எல்லையை தொடுவதைத்தான் உச்சமடைதல் என்கிறோம். 


 

 
ஆண்களை பொறுத்தவரை, விந்து வெளியேறிய உடனேயே அவர்கள் உச்சத்தை அடைந்துவிட்டது போல் உணர்ந்து விடுகிறார்கள். ஆனால், பெண் அப்படி உச்சம் அடைவதில்லை. அவள் உச்சம் அடைந்து விட்டாளா என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் ஆண்களுக்கு இருப்பதில்லை. 
 
இந்த பிரச்சனை பெண்களுக்கு இருக்கிறது என்பதையும், ஆண்கள் இவ்வாறு நடந்து கொள்வது பெண்களுக்கு பிடிப்பதில்லை என்பதையும், முதலில் ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
 
இன்னும் சொல்லப்போனால், பெண்கள் உடலுறவை ரசித்து அனுபவிக்க தொடங்கும் போதே, ஆண்கள் அதை முடித்து விட்டு உறங்கப் போய் விடுகிறார்கள். இது பெண்களுக்கு ஏமாற்றத்தையே தருகிறது. ஏனெனில், உடலுறவை ஆழமாக அனுபவிக்க வேண்டுமென்றே பெண்கள் விரும்புவார்கள். அது பெரும்பாலான ஆண்களுக்கு புரிவதே இல்லை.
 
ஆபாச வீடியோக்கள் பார்ப்பது, நண்பர்களுடன் உரையாடுவது ஆகியவற்றின் காரணமாக, பொதுவாக ஆண்கள் உடலுறவின் மீது  அதிக ஆவலும், விருப்பமும் கொண்டிருப்பார்கள். அதனாலேயே அவர்களால் உடலுறவில் வெகு நேரம் செயல்படுகிறார்கள் அல்லது பல நேரங்களில் உச்சத்தை அனுபவிக்காமலேயே உறவை முடித்துக் கொள்கிறார்கள்.
 
உடலுறவு என்பது ஆண், பெண் இருவரையும் இன்பத்தில் ஆழ்த்துகிற ஒரு சுகமான பயணம். இதில், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புரிதல் இருப்பது அவசியம். முக்கியமாக, ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் காதல் இதில் அடிநாதம்.  தனக்கு உண்மையாக, தன்னை புரிந்தவனாக, தன்னை நேசிப்பவனாக, தன் உணர்வுகளை மதிப்பவனாக உள்ள ஆண்களையே எல்லா பெண்களும் விரும்புவார்கள். அவர்களுக்காக அவர்கள் எதுவும் செய்வார்கள். இது பல ஆண்களுக்கு தெரிவதே இல்லை.


 

 
முக்கியமாக, உடலுறவின் போது, துணையின் மனதை அறியாமல் அவசர கோலத்தில் செயல்படும் ஆண்களை, பெண்கள் விரும்புவதே இல்லை. தனக்கு பிடித்த விளையாட்டுகளை மட்டுமே ஆண்கள் கட்டிலில் விளையாடி விட்டு ஆட்டத்தை முடித்துக் கொள்கிறார்கள்.
 
முக்கியமாக உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு நடத்தப்படும் விளையாட்டுகளை (Fore play) பெண்கள் பெரிதும் விரும்புவார்கள். பெண்கள் அதை மிகவும் ரசிப்பார்கள். அதற்காகவே அவர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால், ஆண்கள் அதை செய்யாதபோது அவர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைகிறார்கள். 
 
இந்த ஏமாற்றம் நாளடைவில் வெறுப்பாக மாறிப் போகும். அதன்பின் உடலுறவு என்றாலே அவர்கள் எரிச்சல் அடையும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அல்லது கடமைக்கு என ஆணை அனுமதித்து விட்டு, ஏமாற்றத்துடனேயே உறங்கிப் போகிறார்கள்.
 
எனவே, முன்விளையாட்டுகளில் கவனம் செலுத்தி, பெண்களை ரசிக்க செய்தால் அவர்கள் மனதில் ஆண்கள் சுலபமாக இடம் பிடிக்கலாம். இல்லையெனில் மிகவும் சிரமம்தான். இதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்news

முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் பொலிவு பெற வேண்டுமா?

உருளைக்கிழங்கை ஒரு பேஸ்ட் போல செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி, 30 நிமிடங்கள் ...

news

தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமா?

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து ...

news

சிறுநீர்த் தாரைத் தொற்றுகளை சரிசெய்யும் வெங்காயம்!

வெங்காயத்தில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் ...

news

சர்க்கரை வியாதிக்கான காரணங்களும் தீர்வும்: ஜக்கிவாசுதேவ் (வீடியோ)

இரத்த ஓட்டத்தில் சக்கரையின் அளவு அதிகமாகிறது. இது தான் சர்க்கரை நோய், நீரிழிவு நோய், ...

Widgets Magazine Widgets Magazine