வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. குழந்தைகள் உலகம்
  4. »
  5. எழுச்சிக் கட்டுரைகள்
Written By Webdunia
Last Updated : வெள்ளி, 7 மார்ச் 2014 (21:03 IST)

கு‌ழ‌ந்தைக‌ளி‌ன் உணவு‌ முறை ச‌ரியானதா

webdunia photo
WD
குழ‌ந்தைகளு‌க்கு நா‌ம் அ‌ன்றாட‌ம் அ‌ளி‌க்கு‌ம் பா‌லி‌ல் இரு‌ந்து, அ‌வ்வ‌ப்போது வா‌ங்‌கி‌க் கொடு‌க்கு‌ம் நொறு‌க்‌கு‌த் ‌தீ‌ணி வரை எ‌த்தனையோ ‌விஷய‌ங்களை நா‌‌ம் கவ‌னி‌க்க வே‌ண்டி உ‌ள்ளது.

முத‌லி‌ல் நா‌ம் பா‌ல் ம‌ற்று‌ம் பா‌ல் சா‌ர்‌ந்த பொரு‌ட்களை‌ப் ப‌ற்‌றி பா‌ர்‌ப்போ‌ம்.

நம‌க்கு பா‌ல் எ‌ன்றா‌ல் பா‌க்கெ‌ட்டி‌ல் அடை‌த்து வரு‌ம் பா‌ல்தா‌ன் தெ‌ரியு‌ம். இ‌ந்த பா‌லி‌ல் எ‌ன்ன‌‌க் கல‌ந்து‌ள்ளது, எ‌ன்ன ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்பதை பலரு‌ம் அ‌றிவ‌தி‌‌ல்லை.

பெரு‌ம்பாலான த‌னியா‌ல் பா‌ல் ‌நிறுவன‌ங்க‌ள், பா‌லி‌ன் அட‌ர்‌த்‌தி அ‌திகமாக இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌‌ற்காக பல ரசாயன‌‌ப் பொரு‌ட்களை‌க் கல‌க்‌கி‌ன்றன‌ர். எனவே குழ‌ந்தைகளு‌க்கு ஆ‌வி‌ன் பா‌ல் வா‌ங்‌கி அ‌ளி‌ப்பது ‌சிற‌ந்தது.

அ‌‌திலு‌ம், பாலை வெறுமனே பொ‌ங்‌கி வ‌ந்தது‌ம் இற‌க்‌கி‌விட‌க் கூடாது. பா‌லி‌ல் 1 ட‌ம்‌ள‌ர் ‌த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு, பா‌ல் பொ‌ங்‌கியது‌ம் ‌தீயை குறை‌த்து வை‌த்து ந‌ன்கு கொ‌தி‌க்க‌வி‌ட்டு‌த்தா‌ன் குழ‌ந்தைகளு‌க்கு‌க் கொடு‌க்க வே‌ண்டு‌ம். அதே‌ப்போ‌ல் பா‌ல் எ‌ப்போது‌ம் ‌தீ‌யிலேயே இரு‌ப்பது‌ம் பல ‌தீய ‌விளைவை ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம்.

ச‌ரி பாலை முடி‌த்தா‌கி‌வி‌ட்டது. அடு‌த்தது ‌நீ‌ங்க‌ள் சமை‌த்து‌க் கொடு‌‌க்கு‌ம் உணவுக‌ள். ‌நீ‌ங்க‌ள் கொடு‌க்கு‌ம் உணவுக‌ள் ச‌த்தானதாகவு‌ம், உ‌ங்க‌ள் குழ‌ந்தை‌யி‌ன் உடலு‌க்கு ஒ‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடியதாகவு‌ம் இரு‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அ‌‌வ‌சிய‌ம். ‌‌கீரை, ப‌ச்சை‌க் கா‌‌ய்க‌றிக‌ள், பழ‌ங்க‌ள் போ‌ன்ற‌வை ‌தினமு‌ம் அவ‌ர்களது உண‌‌வி‌ல் இட‌ம்பெறுவது அவ‌சிய‌ம்.

அடு‌த்தது கடைக‌ளி‌ல் வா‌ங்‌கி‌த் தரு‌ம் நொறு‌க்கு‌த் ‌தீ‌ணிக‌ள். இ‌தி‌ல் பல உணவு‌ப் பொரு‌ட்க‌ள் குழ‌ந்தைக‌ள் சா‌ப்‌பிட ஏ‌ற்க‌த் த‌க்கவை அ‌ல்ல.

இதுபோ‌ன்ற உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌வி‌ற்பனைகு தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் காட்டப்படும் ‌விள‌ம்பர‌ங்களு‌ம், அ‌தி‌ல் நடி‌க்கு‌ம் குழ‌ந்தைகளு‌ம், காரணமா‌கி‌‌ன்றன‌ர். விளம்பரங்களில் காட்டப்படும் உணவுப் பொருட்களில் பெரும்பாலும் குழந்தைகளை குறி வைத்தே தயாரிக்கப்படுகின்றன. அவ‌ற்றை‌ப் பா‌ர்‌க்கு‌ம் குழ‌ந்தைகளு‌ம் அதனை ‌விரு‌ம்‌பி சா‌ப்‌பிடு‌கி‌ன்றன‌ர்.

இதுபோ‌ன்ற பெரும்பாலான தின்பண்டங்கள், எண்ணையில் பொரிக்கப்பட்ட... உருவாக்கப்பட்ட ஸ்நாக்ஸ் அயிட்டங்களே. இவை அனைத்துமே குழந்தைகளின் உடலை கெடுக்கக் கூடியவை. இன்றைய நாகரீக உலகின் நவீன தின்பண்டங்களான இவை, புதிய வடிவங்களில் பாக்கெட் செய்யப்பட்டு பல நாட்கள் கடைகளில் தொங்கவிடப் படுகின்றன. ரசாயனக் கலவையின் துணையோடுதான் இவை உற்பத்தி செய்யப்படுகிறது.


WD
தற்போது ‌விற்பனையாகும் உணவுப் பொருட்களான நொறுக்குத் தீனிகள் பலவும் குழந்தைகளின் உடலை கெடுக்கும் உணவுகளாக இருந்தும் அவை பெருமளவு தயாரிக்கப்படுகின்றன.

தற்போது மருத்துவர்கள் இந்த மாதிரியான ஸ்நாக்ஸ் அயிட்டங்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர். இதற்கு காரணமாக அவர்கள் சொல்லுவது, இந்த நொறுக்குத் தீனிகள் அனைத்தும், மெழுகு கலவையால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை குழந்தைகள் சாப்பிடுவதால் சுகாதாரத்தை சிதைத்து விடும். மேலும் இந்த உணவுப் பொருட்கள் புதிய பல்வேறு நோய்களை உற்பத்தி செய்யும் விஷத் தன்மையுள்ளவை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.

உதாரணமாக, அந்த தின்பண்டங்களை எரித்து‌ப் பா‌ர்‌த்தால் நீங்களே அதை கண்கூடாக அ‌றிய முடியும். மெழுகுவர்த்தி போல் அவை எரியும்! இதை குழந்தைகள் சாப்பிட்டால் என்னவாகும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

இந்தமாதிரியான தின்பண்டங்களுக்குப் பதிலாக நீங்களே வீட்டில் வித விதமாக, கலர் கலராக தின்பண்டங்களை தயாரித்து குழந்தைகளுக்கு கொடுத்து சாப்பிட வையுங்கள். குறிப்பாக சத்தான உணவுகளை தயாரித்துக் கொடுத்து, சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கிக் கொடுங்கள்.

மேலு‌ம், இவ‌ற்‌றி‌ல் வெறு‌ம் கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய் தூ‌ள் தூவ‌ப்ப‌ட்டு ‌வி‌ற்பனை‌க்கு வரு‌கி‌ன்றன. இதனா‌ல் குழ‌ந்தைக‌ளி‌ன் வ‌யி‌ற்‌றி‌ல் அ‌ல்ச‌ர் வரவு‌ம் வா‌ய்‌ப்பு ஏ‌ற்படு‌கிறது.

எனவே, உ‌ங்க‌ள் குழ‌ந்தை‌க்கு ‌‌நீ‌ங்க‌ள் ‌வீ‌ட்டிலேயே தயா‌ரி‌த்த உணவு‌ப் ப‌ண்ட‌ங்ளை உ‌ண்ண வையு‌ங்க‌ள். ‌‌நீ‌ங்க‌ள் செ‌ய்யு‌ம் உணவு‌ப் பொரு‌ட்களை ‌வித‌விதமாக, கல‌ர் கலராக‌ச் ச‌ெ‌ய்து பாரு‌ங்க‌ள். சம‌ச்‌சீ‌ர் உணவு‌ம் ‌கிடை‌க்கு‌ம், எத‌ற்கு‌ம் பய‌ப்பட வே‌ண்டா‌ம்.

சமச்சீர் உணவு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய நரம்புப் பாதைகளை ஊக்குவித்து உடலுக்கும், மனதிற்கும் இன்பமளிக்கிறது. பட்டாணி, அவரையில் கிடைக்கும் வைட்டமின் பி குறைந்தால் மனச் சோர்வு, நரம்புத் தளர்ச்சி ஏற்படும். கீரை வகைகளில் கிடைக்கும் இரும்புச்சத்து குறைந்தால் ஞாபக மறதி, உடல் சோர்வு, மனச்சோர்வு உண்டாகும்.

சோயாபீன்ஸ் போன்ற பொருட்களில் கிடைக்கும் தையாமின் மன அமைதி, நல்ல தூக்கத்தை கொடுக்கும். இவை குறைந்தால் மனத் தளர்ச்சி ஏற்படும். அரிசி, கோதுமை மற்றும் இனிப்புகளில் உள்ள மாவுப் பொருட்கள் உடலுக்கு சக்தியைக் கொடுத்து மன அமைதியை ஏற்படுத்துகிறது.

இவை எ‌ல்லா‌ம் ‌நீ‌ங்க‌ள் கடை‌யி‌ல் வா‌ங்கு‌ம் நொறு‌க்கு‌‌த் ‌தீ‌ணிக‌ள் தருமா? ‌‌சி‌‌ந்‌தி‌த்து‌ப் பாரு‌ங்க‌ள்.