வெள்ளி, 29 மார்ச் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. குழந்தைகள் உலகம்
  4. »
  5. எழுச்சிக் கட்டுரைகள்
Written By Webdunia

குழந்தைகளுக்கு வாசித்தலில் ஏற்படும் பிரச்சனைகள்!

webdunia photoWD
ி‌ஸ்லெக்சியா என்ற வாசித்தலில் ஏற்படும் தடுமாற்றம், கண்களால் பெறப்படும் எழுத்து வடிவங்களை அர்த்தமுள்ள மொழியாக மாற்றமுடியாத மூளையின் திற‌இன்மையாகும். இது குழந்தைகளுக்கு கற்றலின் போது ஏற்படும் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையாகும்.

இந்தியாவி‌ப‌ள்‌ளி‌யி‌லபடி‌க்கு‌ம் ‌சிகுழ‌ந்தைகளு‌க்கஇந்த பிரச்சனை இருந்து வருகிறது. குறிப்பாக சிறப்பு கல்வி சேவைகளை பெறும் பெரும்பாலான குழந்தைகளுக்கு வாசிப்பதில் தடுமாற்றம் இரு‌க்கிறது.

ஒரு சாதாரண புத்தியுள்ள மற்றும் பார்வை நன்றாக உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு‌கூஇந்த வாசிப்பு பிரச்சனை ஏற்படுகிறது. ஆனால் இதுபோன்ற பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு பேச்சில் எந்த ஒரு குறையும் இருக்காது. ஆனால் பேசுவதை புரிந்து கொள்வதிலும் எழுத்து மொழியை அறிவதிலும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இதற்கு பல் துறை புலனுணர்வு கல்வித் திட்டப் பயிற்சி முறை எ‌ன்சிகிச்சை பலன் அளித்து வருகிறது. பெற்றோர்களின் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பும் இதுபோ‌ன்குறையகுணப்படுத்துவ‌தி‌ல் முக்கிய பங்கு வகிக்கிறது.

குழ‌ந்தை‌க‌ளிட‌மஏ‌‌ற்படு‌மஅறிகுறிகள் :

பள்ளிக்கு குழந்தைகள் செல்ல துவங்கும் முன் இ‌ந்குறையதெ‌ரி‌ந்தகொ‌ள்வதஅரிது. ஆனால் சில முந்தைய அறிகுறிகள் டி‌ஸ்லெக்சியா இருப்பதை அறிவுறுத்தலாம். அதாவது உங்கள் குழந்தைகள் கேள்விகளுக்கு தாமதமாக பதில் அளிக்கலாம், புதிய வார்த்தைகளை பேசுவதில் தடுமாற்றம் ஆகியவை இருந்தால் டி‌ஸ்லெக்சியா ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

குழந்தைகள் பள்ளிக்கு செல்ல துவங்கிய சில நாட்களில் உங்களுக்கு குழந்தைகளிடத்தில் வாசிப்புப் பிரச்சனை இருப்பது தெரியவரும்.

அச்சில் உள்ள எழுத்துகளை என்னவென்று கூறுவதில் சிரமம்.உங்கள் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப பேச்சுத் திறன் இல்லாமல் அதனை விட குறைந்த நிலையில் உள்ள பேச்சுத் திறன் ஆகியவை டி‌ஸ்லெக்சியா இருப்பதை அறிவுறுத்தலாம்.


இக்குழந்தைகளுக்கு பொதுவாக தாங்கள் கேட்பதை அர்த்தமுள்ள ஒரு வாக்கியமாக உணர்ந்து பதில் கூறுவதில் சிரமம் ஏற்படும். வேகமாநா‌மபே‌சினா‌லஅதனை புரிந்து கொள்வதில் திணறல் ஏற்படும். பல்வேறு விஷயங்களை ஒரே சமயத்தில் கூறினால் ஞாபகம் வைத்துக் கொள்வதில் சிரமம் ஏற்படலாம்.

webdunia photoWD
ஆங்கில எழுத்துகளை வைத்து கூறவேண்டுமென்றால் b மற்றும் d எழுத்துகளை மாற்றி மாற்றி பிரயோக்கலாம். அதேபோல் ஒரே எழுத்துகள் கொண்ட இரு வேறு வார்த்தைகளை மாறி மாறி பயன்படுத்துவதும் டி‌ஸ்லெக்சியா குழந்தைகளின் பொதுவான அறிகுறிகள். உதாரணமாக saw மற்றும் was ஆகிய வார்த்தைகளி‌ல் குழப்பம் நிலவும்.

ி‌ஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் :

* வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக படிக்க துவங்குவா‌ர்க‌ள்.

* வார்த்தைகளிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அறிய தவறுவா‌ர்க‌ள்.

* ஒவ்வொரு வார்த்தைக்கும் இருக்கும் இடைவெளியை அறியத் தவறுவா‌ர்க‌ள்.

* தெரியாத வார்த்தையை உச்சரிக்க திணறுவா‌ர்க‌ள்.

இத‌ற்காகாரணங்கள் :

அறி திறனுக்கும் அதனை செயல்படுத்துவதற்கும் இடையே இடைவெளியை உருவாக்குவதுதான் கற்றலில் ஏற்படும் பிரச்சனையாக நாம் கருதுகிறோம். டி‌ஸ்லெக்சியா உள்ள குழந்தைகள் சராசரி மாணவ மாணவியாகவோ அல்லது சராசரிக்கும் மேற்பட்ட மாணவ மாணவியராகவோ இருக்கலாம். ஆனால் வாசிப்புத் திறன் அவர்களிடம் எதிர்பார்ப்பதை விட குறைவாகவே காணப்படும். கற்றலின் பிற பிரச்சனைகள் என்னவெனில் கவன‌் ‌பிற‌ழ்வது, எழுத்துப் போட்டித் திறன்களில் சரியாக செயல்பட முடியாதது, மேலும் கணக்கு பாடத்தில் திறமையின்றி இருத்தல் ஆகியவையாகும்.

மூளையிலுள்ள மொழி அறிதிறன் பகுதியில் ஏற்படும் சில மாற்றங்களால் டி‌ஸ்லெக்சியா ஏற்படுவதாக ஆய்வு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது ஒரு பர‌ம்பரை ‌வியா‌தியாகவு‌மஉ‌ள்ளது.
நோய்க்கணிப்பு :

ி‌ஸ்லெக்சியா இருப்பதை அறிய ஒரே ஒரு பரிசோதனை முறை எதுவுமில்லை. உங்கள் மருத்துவர் குழந்தைகளின் புலன் உணர்வு திறன், அறி திறன், கல்வி மற்றும் மனோவியல் காரணிகளை பரிசோதனைக்கு எடுத்துக் கொள்வார். உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி விதம், மருத்துவ வரலாறு, உங்கள் குடும்ப வரலாறு ஆகியவற்றை மருத்துவர் கேட்டறியலாம்.

கீழ் வரும் பரிசோதனைகளையும் செய்யுமாறு கூறலாம் :

webdunia photoWD
பார்வை, கேட்கும் திறன் மற்றும் நரம்பியல் பரிசோதனைகள் : ஏனெனில் உடலின் பல்வேறு பகுதியில் உள்ள பிரச்சனையால் டி‌ஸ்லெக்சியா ஏற்பட்டுள்ளதை அறிய இந்த பரிசோதனை அவசியம்.

மனோவியல் மதிப்பீடு : சமூக, குடும்பப் பிரச்சனைகள், கவலை, பயம், மன அழுத்தம் இதனால் டி‌‌ஸ்லெக்சியா எற்பட்டுள்ளதா என்பதை அறிய இது உதவும்.

கல்வித் திறன் குறித்த மதிப்பீடு : ஒரு நிபுணரை வைத்து உங்கள் குழந்தைகளின் வாசிப்பு எழுத்து புரிதல் திறனை பரிசோதனை செய்யலாம்.

சிகிச்சை :

டிஸ்லெக்சியாவிற்கு காரணமான மூளையின் பாதிக்கப்பட்ட பகுதியை சரிசெய்யும் சிகிச்சை எதுவும் இல்லை. கல்வி போதிப்பு முறைகளில் மாற்றங்களை செய்வதன் மூலமும், மனோவியல் பரிசோதனை மூலம் குழந்தையின் இந்த பிரச்சனை குறித்து ஆசிரியரிடம் தெரிவித்து அதற்கு தக்கவாறு அந்த குழந்தையிடம் மட்டும் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்ளுமாறும், பாடம் புகட்டும் முறைகளில் மாற்றங்களை செய்யுமாறும் கேட்டுக் கொள்ளலாம்.

உதாரணமாக, புத்தகத்தில் உள்ள பாடங்களை ஒருவர் வாயால் படித்து அதற்குத் தக்கவாறு புத்தகத்தில் உள்ள எழுத்துகளை அடையாளம் காட்டி பயிற்றுவிக்கலாம். இக்குழந்தைகளின் அனைத்து புலன் உணர்வுகளும் உணருமாறு பாடம் புகட்டல் அணுகுமுறைகளை இந்த துறையில் நிபுணர்களானவர்கள் செய்வார்கள்.

அனைத்திற்கும் மேலாக பெற்றோர்கள் இக்குழந்தைகளிடம் இது ஒரு சாதாரண விஷயம் என்றும் விரைவில் படிக்கத் தொடங்கிவிடுவாய் என்றும் உணர்வு பூர்வமான ஆதரவு அளிக்கவேண்டும். குழந்தைகளுக்கு பாடப்புத்தகம் தவிர பிற கதைப் புத்தகத்தை வாசித்துக் காட்டி அதில் உள்ள எழுத்துகளை அடையாளம் காட்டி மெதுவாக எழுத்துக்கு தயார்படுத்தி வந்தால் இது நாளடைவில் குணமாகும் மிகச் சாதரணமான ஒரு நிலையே.