ப‌ள்‌ளி‌யி‌ல் ‌பிரா‌ர்‌த்தனை‌க் கூ‌ட்ட‌ம் ர‌த்தாகு‌ம்

Webdunia| Last Updated: ஞாயிறு, 23 பிப்ரவரி 2014 (01:00 IST)
பன்றி காய்ச்சல் நோயை கட்டுப்படுத்துவதற்காக, பள்ளிக்கூடம் தொடங்குவதற்கு முன்பு நடத்தப்படும் பிரார்த்தனை கூட்டங்களை ரத்து செய்யும்படி மத்திய அரசு ப‌ள்‌ளிகளு‌க்கு உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

இந்தியாவில் பரவி வரும் பன்றி காய்ச்சல் நோயினால் இதுவரை 1700-க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 28 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்த நோயை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகின்றன.

பொதும‌க்க‌ள் ம‌ற்று‌ம் க‌ட்‌சிக‌ள் சா‌ர்‌பி‌ல் ப‌ள்‌ளிகளை மூட‌ வே‌ண்டு‌ம் ‌எ‌ன்று கோ‌ரி‌க்கை எழு‌ந்தது. ஆனா‌ல், ப‌ள்‌ளிகளை மூடு‌ம் அள‌வி‌ற்கு ‌நிலைமை மோசமடைய‌வி‌ல்லை, க‌ட்டு‌க்கு‌ள்தா‌ன் இரு‌க்‌கிறது எ‌ன்று சுகாதார‌த் துறை ப‌தில‌ளி‌த்து‌ள்ளது.
இ‌ந்த ‌நிலை‌யி‌ல், பள்ளிக்கூடங்களில் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விரைவில் வகுத்து உத்தரவு பிறப்பிக்க உள்ளது. பொதுவாக, பள்ளிக்கூடங்களில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக, மாணவ, மாணவிகளின் பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெறும்.
அப்போது மாணவர்கள் மிக நெருக்கமாக நிற்க வேண்டியது இருப்பதால் பன்றிகாய்ச்சல் நோய் கிருமிகள் பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, இப்படிப்பட்ட கூட்டத்தை கூட்டுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அத்துடன் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களின் இருக்கை அருகில் சென்று அவர்களுக்கு பன்றி காய்ச்சல் நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படுகிறதா என்று கண்டறிவதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்பி உரிய சிகிச்சை பெற அறிவுறுத்த வேண்டும் எ‌ன்று குலாம்நபி ஆசாத் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :