தாயை 100 முறை கா‌ப்பா‌ற்‌றிய 9 வயது ‌சிறுவ‌ன்!

Webdunia|
இ‌ங்‌கிலா‌ந்‌தி‌ல் தொலைபேசி 999 எ‌ன்ற எ‌ண்ணை தனது 9வது வய‌திலேயே பய‌ன்படு‌த்த‌க் க‌ற்று‌க் கொ‌ண்ட சிறுவன், தனததாயை இதுவரை நூ‌ற்று‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட முறை கா‌‌ப்பா‌ற்‌றியு‌ள்ளா‌ன்.

இ‌ங்‌கிலா‌ந்‌தி‌ல் உ‌ள்ள 47 வயதான ஆ‌ன் டெ‌‌ய்ல‌ர் எ‌‌ன்ற பெ‌ண்ம‌ணி‌க்கு ச‌ர்‌க்கரை ‌வியா‌தி. கடுமை‌யா‌க பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட டெ‌ய்லரு‌க்கு அவரது மக‌ன் டே‌னி‌யி‌ன் உத‌வி இ‌ல்லாம‌ல் வாழ முடியாத ‌‌‌நிலை. ஆனா‌ல் டே‌னி‌யி‌ன் வயதோ ஒ‌ன்பது தா‌ன். ஆனாலு‌ம் த‌ன் மக‌ன் தன‌க்கு ‌‌சி‌கி‌ச்சை அ‌ளி‌‌க்கு‌ம் முறையை டெ‌ய்ல‌ர் க‌ற்று‌க் கொ‌டு‌த்தா‌ர்.
தா‌யி‌ன் இர‌த்த‌த்‌தி‌ல் வேகமாக குறை‌‌ந்து வரு‌ம் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவை‌க் க‌ட்டு‌‌ப்படு‌த்து‌ம் ‌விதமாக காலை‌யி‌ல் முத‌ல் வேலையாக தா‌ய்‌க்கு இ‌ன்சூ‌லி‌ன் போடுவ‌தி‌ல் தொட‌ங்கு‌கிறது டே‌னி‌யி‌ன் ப‌ணி.

ப‌ள்‌ளி முடி‌ந்து ‌வீடு ‌திரு‌ம்‌‌பிய உட‌ன் தனது தா‌ய்‌க்கு இர‌த்த ப‌ரிசோதனை செ‌ய்வது தொட‌ங்‌கி, இரவு முழுவது‌ம் தாயை‌க் கவனமாக பா‌ர்‌த்து‌க் கொ‌ள்வது என தொட‌ர்‌கிறது.
டே‌னி‌யி‌ன் இ‌ந்த ‌தியாக‌ம் அவனு‌க்கு, டெ‌ய்ல‌ர் எழு‌தியு‌ள்ள கடித‌த்‌தி‌ன் மூல‌ம் தெ‌ரிய வரு‌கிறது. அ‌க்கடித‌த்‌தி‌ல் தா‌ன் ஒருவேளை ‌திடிரெ‌ன்று இற‌ந்து போனா‌ல் அடு‌த்து எ‌ன்ன செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்பதையு‌ம் டெ‌ய்ல‌ர் அ‌க்கடித‌த்‌தி‌ல் டே‌னி‌க்கு எழு‌தியு‌ள்ளா‌ர்.
தா‌ய்‌க்கு ப‌ணி‌விடை செ‌ய்யு‌ம் டே‌னி‌க்கு ப‌ல்வேறு தர‌ப்‌பி‌ல் இரு‌ந்து‌ம் பாரா‌ட்டுக‌ள் கு‌வி‌ந்தன. இ‌ங்‌கிலா‌ந்‌தி‌ன் பெருமை‌‌க்கு‌ரியவ‌ர் ‌விருதை கட‌ந்த 2004-‌ஆ‌ம் ஆ‌ண்டு டெ‌ய்‌லி ‌மிர‌ர் நாளேடு டே‌னி‌க்கு வழ‌ங்‌கி கெளரவி‌‌த்த‌து. உ‌ரிய நேர‌த்‌தி‌ல் 999 எ‌ன்ற எ‌ண்ணை தொட‌ர்பு கொ‌ண்டு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌த்தத‌ன் மூல‌ம் இதுவரை நூ‌ற்றுக்கு‌ம் மே‌ற்ப‌ட்ட தடவைக‌ளி‌ல் த‌ன் தாயை‌க் டே‌னி கா‌ப்பா‌ற்‌றியு‌ள்ளா‌ன்.


இதில் மேலும் படிக்கவும் :