குண்டு குழந்தைகளுக்கு சோதனை

Webdunia|
நம்மூர் குழந்தைகள் புத்தகங்களை சுமக்க முடியாமல் கஷ்டப்படுவதைக் கண்டு ரத்த கண்ணீர் வடிக்கும் நிலை உள்ளது.

ஆனால் அமெரிக்காவிலோ பொரித்த சிப்ஸ், அதிக கலோரிகள் கொண்ட பர்கர், பிட்சாக்களை அதிகமாக விழுங்கிவிட்டு தொந்தி பெருத்து தங்களது உடலையே சுமக்க முடியாமல் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதனால் தற்போது 2 வயதுக் குழந்தைகளுக்கே கொழுப்பு பரிசோதனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். பின்னாளில் சர்க்கரை நோய், இதய நோய்கள் வராமல் தடுக்கத்தான் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கொழுப்பைக் கட்டுப்படுத்த 8 வயது முதலே குழந்தைகளுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகள் மீது குண்டுகளை வீசி அச்சத்தை ஏற்படுத்தி வரும் அமெரிக்காவிற்கும் இந்த குண்டு தான் பெரும் பிரச்சினையாக உள்ளது.

இந்தியர்கள் அதிகம் சாப்பிடுவதால்தான் உலகத்தில் உணவுப் பற்றாக்குறை, பஞ்சம் ஏற்படுவதாக அமெரிக்காவின் அதிபர் வாய்மொழிந்தது தற்போது நினைவுக்கு வருகிறது.
இந்த செய்தியைப் படித்தால், அதிபரின் ஊர்ப் பிள்ளைகள் சாப்பிடுவதில் கீழே சிந்தும் மிச்சங்களையே ஒரு நாட்டிற்கு உணவாக அளிக்கலாம் போல் இருக்கிறதே... முதலில் நம்முடைய சுத்தத்தைப் பார்த்துக் கொண்டு பிறகு அடுத்தவரின் அழுக்கை அலசலாம் அதிபரே.


இதில் மேலும் படிக்கவும் :