ஒலிம்பிக் போட்டி: இந்திய வீராங்கனை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

ஒலிம்பிக் போட்டி: இந்திய வீராங்கனை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்


Abimukatheesh| Last Modified சனி, 13 ஆகஸ்ட் 2016 (21:40 IST)
ரியோ ஒலிம்பிக் பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை லலிதா பாபர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

 

 
ரியோ ஒலிம்பிக்கில் இன்று பெண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியின் தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை லலிதா பாபர் கலந்து கொண்டார். 18 பேர் கொண்ட 2-வது பிரிவில் அவர் பங்கேற்றார்.
 
இப்போட்டியின் இறுதியில் 9 நிமிடம் 19:76 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த லலிதா பாபர், நான்காவது இடத்தைப் பிடித்தார். இரண்டு ஹீட்டிலும் சேர்ந்து 7-வது இடத்தை பிடித்ததால் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :