’மகிழ்ச்சி’ - இந்திய வீராங்கனை ப்ரீ- குவார்ட்டர் பைனலுக்கு முன்னேற்றம்

’மகிழ்ச்சி’ - இந்திய வீராங்கனை ப்ரீ- குவார்ட்டர் பைனலுக்கு முன்னேற்றம்


Dinesh| Last Modified வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (04:30 IST)
பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் கடந்த 5ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்திய அணியில் 118 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

 


வில்வித்தைப்போட்டியின் முதல் சுற்றில், இந்திய வீராங்கனை பாம்பய்லா தேவி, ஆஸ்திரிய வீராங்கனை லாரன்ஸ் பல்டேப்-ஐ எதிர்கொண்டு வெற்றி பெற்றதால் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.  இரண்டாவது சுற்றில், சீன தைபெயி வீராங்கனை லீ ஷி-சியாவை எதிர்கொண்டு 6-2 என்ற கணக்கில் பாம்பய்லா தேவி வெற்றி பெற்று ப்ரீ- குவார்ட்டர்  பைனலுக்கு முன்னேறினார். அவர் இந்தியாவிற்காக தங்கம் வெல்வார் என எதிர் பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :