1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. ரியோ ஒலிம்பிக்ஸ் 2016
Written By Murugan
Last Updated : செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (14:23 IST)

என் துப்பாக்கி விலைக்கு வேண்டுமா? : அபினவ் பிந்த்ரா கிண்டல்

ஒலிம்பிக் போட்டியில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கு கொண்ட அபிநவ் பந்த்ரா வெண்கலப் பதக்கத்தை கூட கடைசி நேரத்தில் நழுவ விட்டார்.


 

 
கடந்த திங்கட் கிழமை நடைபெற்ற இறுதி சுற்றில் சற்று தடுமாறிய பிந்த்ரா, கடைசியில் நான்காவது இடத்தை பிடித்தார். 2008ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், பிந்த்ரா தங்கப் பதக்கம் பெற்றார். ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற ஒரே இந்தியர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால், இந்த ஒலிம்பிக்கில் அவரால் எந்த பதக்கத்தையும் பெறமுடியவில்லை. அதனால், தோல்வி முகத்தோடு பிந்த்ரா வெளியேற வேண்டியதாயிற்று.
 
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. எனது துப்பாக்கியை மீண்டும் தொடக்கூடாது என்று முடிவெடுத்துள்ளேன். பொழுதுபோக்குக்காக கூட அதன்பக்கம் செல்லமாட்டேன். பயிற்சியாளர் வேலையை நான் தேர்ந்தெடுத்தால், மாணவர்கள் 2 மணி நேரத்திற்கு மேல் என்னிடம் தாக்குபிடிக்க முடியாமல் ஓடிவிடுவார்கள்.
 
எனவே அடுத்தது என்ன என்று இனிமேல்தான் யோசிக்க வேண்டும். ஓய்வு பெறுவது என் இறுதியான முடிவு. என் துப்பாக்கியை விற்கப்போகிறேன். உங்களுக்கு வேண்டுமா?” என்று வேடிக்கையாக கேட்டார்.