வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By

சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக சிந்தனைகள்....!!

எஜமானனைப் போல செயல்படுங்கள். அடிமை உணர்வை கைவிட்டு சுதந்திரமாக பணிபுரியுங்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண்டவன் நம்மை படைத்திருக்கிறான். உயர்வான செயல்களைச் செய்தால் வாழ்க்கை பயனுடையதாகும்.
நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் உங்களுக்குள்ளே இருக்கின்றன.
 
உழைப்பே வடிவெடுத்த சிங்கத்தின் இதயம் படைத்த ஆண்மகனையே திருமகள் நாடிச் செல்கிறாள். பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே ஆன்மிகம் ஆகும்.
 
நம்மிடம் உள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வது தான். கல்வியின் அடிப்படை லட்சியமே மனதை ஒருமுகப்படுத்துவதுதான்.
 
ஒரு செயலில் வெற்றி பெறவேண்டுமானால், விடாமுயற்சியும், மனவுறுதியும் ஒருவனிடம் பெற்றிருக்கவேண்டும். நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும், பூரணத்துவமும் பெற்றவர்கள்.
 
அரிய பெரிய விஷயங்களை தியாகமனம் படைத்தவர்களால் மட்டுமே சாதிக்க முடியும். நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை. இதுவே உங்கள் தாரக மந்திரமாகட்டும்.
 
சுயநலமே ஒழுக்கக்கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். ஒழுக்கத்தின் இலக்கணம் இது தான்.