1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2015 (03:28 IST)

ஆன்மீகத்தில் இன்று ஒரு அதிசயம்: ஆடிவெள்ளியும் பௌர்ணமியும் சேர்ந்த நன்நாள்

இன்று, மூன்றாம் ஆடிவெள்ளியும், பௌர்ணமியும் சேர்ந்து வருவதால் அதிவிசேஷ நாளாகக் கருதப்படுகிறது.



 
தமிழகத்தில் ஆன்மீகத்திற்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதுவும் கடவுள் வழிபாட்டில் பெண்கள் மிகவும் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். இந்த நிலையில்தான், இன்று மூன்றாம் ஆடிவெள்ளியும், பௌர்ணமியும் சேர்ந்து வருகிறது.
 
இந்த ஆடிமாதத்து பௌர்ணமியை குருபூர்ணிமா அல்லது வியாச ஜெயந்தி என்று அழைப்பார்கள். மஹா விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுபவர் வியாசர் ஆவார். வேதங்களான ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்று நான்காக வகுத்தவர். வியாசரை குருபூர்ணிமா தினமான இன்று நினைந்து வணங்கினால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 
மேலும், ஆடியில் அம்மன் கோயில்களில் மஞ்சள், குங்குமத்துடன், கண்ணாடி வளையல்களைப் பெண்களுக்குப் பிரசாதமாக அளிப்பர். இந்த நாளில் ஒருசில குடும்பங்களில் உள்ள சகோதரர்கள் தங்கள் உடன்பிறந்த சகோதரிகளை விருந்துக்கு அழைத்து உபசரிப்பர்.
 
மேலும், அவர்களைப் பெண் கடவுளான அம்மன் போல கருதி, அவர்களுக்கு, மஞ்சள், குங்குமம், வளையல்களுடன் புடவைகளையும் அளித்து மகிழ்வர்.