வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 16 ஏப்ரல் 2014 (09:34 IST)

லஞ்சம் வாங்க மாட்டேன், கட்ட பஞ்சாயத்து செய்ய மாட்டேன் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

லஞ்சம் வாங்க மாட்டேன், கட்ட பஞ்சாயத்து செய்ய மாட்டேன், அடுத்தவர்கள் சொத்தை அபகரிக்க மாட்டேன் என்று பெருந்துறை ஒன்றிய பகுதி வாக்காளர்களிடம் உறுதி அளித்து வாக்கு சேகரித்தார் திருப்பூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
 
பெருந்துறை ஒன்றியப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்தார் இளங்கோவன். அவர் பேசியது:
 
எங்கள் முன்னோர்கள் வைத்துவிட்டுச் சென்ற சொத்தை விற்றுதான் குடும்பம் நடத்தி வருகிறேன்.
 
அரசு வேலை வாங்கித் தருவதற்காக லஞ்சம் வாங்கமாட்டேன். கட்ட பஞ்சாயத்து செய்து அடுத்தவர்கள் சொத்தை அபகரிக்கமாட்டேன். மக்களுக்கு சேவை செய்தற்கு பாகுபாடு பார்க்கமாட்டேன். வங்கியில் கல்விக் கடன் பெற்றுத் தருவேன்.
 
கிராமப்புறங்களில் வறட்சியால் மக்கள் வேலையின்றி கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் கஷ்டங்களை போக்கும் விதமாக 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்துவதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சம்பளமும் ரூ. 168 என உயர்த்தி வழங்கப்படும்.
 
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களில் 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியால் மட்டுமே மக்களுக்கு முழு பாதுகாப்பு தர முடியும் என்றார்.
 
பெருந்துறை ஒன்றியத்திற்கு உள்பட்ட பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம்,  பள்ளபாளையம், காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி ஆகிய பேரூராட்சிகள், சிங்காநல்லூர், திங்களூர், வெட்டையன்கிணறு, துடுப்பதி, சுள்ளிபாளையம், சீனாபுரம், பட்டக்காரன்பாளையம், பெரிய வீரசங்கிலி, சின்ன வீரசங்கிலி, விஜயமங்கலம் ஆகிய ஊராட்சிகள் உள்பட 60 க்கும் மேற்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.