வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 7 மே 2014 (11:54 IST)

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று கேரள அரசு பிறப்பித்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்கில் விசாரணை நடத்தி வந்த தலைமை நீதிபதி உட்பட 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று மிக முக்கிய தீர்ப்பினை வழங்கியுள்ளது.
 
தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதால், அதன் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்.
 
பெரியாறு அணையை பராமரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
 
மேலும், முல்லப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதை எதிர்த்து கேரள அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது. அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. நீதிமன்ற தீர்ப்புகளை சட்டம் மூலம் தடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.