செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (17:11 IST)

மனைவி-தங்கைக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த தம்பியை கொன்ற அண்ணன்

மனைவி-தங்கைக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த தம்பியை கூலிப்படையை ஏவி கொன்ற அண்ணன் கைது செய்யப்பட்டார்.
 
காஞ்சீபுரம் பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் 2 பேர் ஒருவரை ஒருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டனர். அவர்களை ரோந்து வந்த சிவகாஞ்சி காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர்.
 
அவர்கள் காஞ்சீபுரம் நரசிங்கராயர் தெருவை சேர்ந்த கார்த்திகேய ராஜன், செவிலிமேடு அம்பேத்கார் நகரை சேர்ந்த விஜயசங்கர் என்பது தெரிந்தது.
 
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு- கார்த்திகேயராஜனின் தம்பி செந்தில்ராஜை கொன்று புதைத்ததற்கு ரூ.7 லட்சம் பேசிவிட்டு ரூ.5 லட்சம் மட்டும் கொடுத்ததாக விஜயசங்கர் போதையில் உளறினார்.
 
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் 2 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் கார்த்திகேயராஜன், தனது தம்பி செந்தில்ராஜை கடந்த 4.10.11 அன்று கூலிப்படையை சேர்ந்த விஜயசங்கர், கங்காதரன், சதீஷ்குமார், நாகரத்தினம், ஜெயபால் ஆகியோர் மூலம் கொன்றதும் இதற்கு ரூ.7 லட்சம் பேசி ரூ.5 லட்சம் கொடுத்ததும் தெரிந்தது.
 
அவர்கள் கொடுத்த தகவலின்படி கூலிப்படையை சேர்ந்த கங்காதரன், சதீஷ்குமார், நாகரத்தினம், ஜெயபால் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் செந்தில்ராஜ் உடலை காஞ்சீபுரம் பாலாற்று பாலத்தின் கீழ் மணலில் புதைத்து விட்டதாக தெரிவித்தனர்.
 
இதையடுத்து உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்ட கார்த்தி கேயராஜன், கூலிப்படை தலைவன் விஜயசங்கரை காவல்துறையினர் அழைத்து சென்றனர்.

டி.எஸ்.பி. பாலச்சந்தர், தாசில்தார் பானு முன்னிலையில் அடையாளம் காட்டி இடத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலம் தோண்டினர். சுமார் 5 அடி ஆழத்தில் புதைந்து இருந்த எலும்பு கூடுகள் வெளியே தெரிந்தது.
 
அதனை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அங்கேயே செங்கல்பட்டு அரசு மருத்துவர் அபிராமி பரிசோதனை செய்தார். பின்னர் முக்கிய எலும்புகள் மட்டும் ரசாயன பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மணலில் புதைந்து இருந்த ஒரு ஜீன்ஸ் பேண்டையும் கைப்பற்றினர். அது கொலையுண்ட செந்தில் ராஜன் அணிந்ததாக இருக்கலாம் என்று தெரிகிறது.
 
இதுகுறித்து கார்த்திகேயராஜன் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:–
 
எனக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். தம்பி செந்தில்ராஜ் மற்றும் தங்கைகள் என அனைவரும் ஒரே வீட்டில் தங்கி இருந்தோம். நானும் தம்பியும் காஞ்சீபுரம் வணிகர் தெருவில் டீக்கடை நடத்தி வந்தோம். செந்தில்ராஜிக்கு குடிப்பழக்கம் உண்டு அவனுக்கு 2 முறை திருமணம் செய்து வைத்தும் மனைவிகள் பிரிந்து சென்றுவிட்டனர்.
 
கடையில் உள்ள ரூபாய்களை எடுத்தும் குடித்து வந்தான். இரவில் வீட்டில் தூங்கும் போது எனது மனைவி, தங்கைகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டான். இதுபற்றி அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். பலமுறை கண்டித்தும் அவன் திருந்தவில்லை. அவனது செக்ஸ் தொல்லைகள் எல்லை மீறி சென்றது.
 
இதையடுத்து தம்பி செந்தில்ராஜை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். இதற்காக கூலிப்படை தலைவன் விஜயசங்கரை பார்த்து ரூ.7 லட்சம் கொடுப்பதாக தெரிவித்தேன். அவன் கொலை செய்ய ஒப்புக் கொண்டான். இதற்கு முன் பணமாக ரூ.5 லட்சம் கொடுத்தேன்.
 
கடந்த 4.10.11 அன்று இரவு மது வாங்கி கொடுப்பதாக செந்தில்ராஜை நானும் கூலிப்படையை சேர்ந்த விஜயசங்கர் உள்பட 5 பேரும் காஞ்சீபுரம் பாலாற்று பாலத்தின் கீழ் அழைத்து சென்றோம். அங்கு எனது கண் எதிரிலேயே தம்பி செந்திராஜை கூலிப்படையினர் குத்தி கொன்றனர். பின்னர் உடலை அங்கே புதைத்து விட்டோம்.
 
இதுபற்றி எனது மனைவிக்கோ குடும்பத்தினருக்கோ தெரியாது. செந்தில்ராஜ் வேலை சம்பந்தமாக கேரளா சென்றுவிட்டதாக கூறினேன். இதனால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. அவன் இறந்த நாளில் யாருக்கும் தெரியாமல் திதி கொடுத்தேன்.
 
பேசியபடி கொலைக்கு மீதி பணம் ரூ.2 லட்சம் கொடுக்காததால் விஜய சங்கர் என்னிடம் தகராறில் ஈடுபட்டான். அப்போது ரோந்து வந்த காவல்துறையினர் எங்களை கைது செய்து கொலை பற்றி விசாரித்து விட்டனர் என்று அவர் கூறியுள்ளார்.