வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By ilavarasan
Last Updated : சனி, 5 ஏப்ரல் 2014 (17:21 IST)

பாஜக-அதிமுக இடையே ரகசிய உறவு - மு.க.ஸ்டாலின்

பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே ரகசிய உறவு உள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
 
சிவகங்கை நகர் சிவன்கோவில் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் சுப.துரைராஜூக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு அவர் பேசியதாவது.
 
தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசத் தொடங்கும் போது அமைதி, வளம், வளர்ச்சி என்ற வார்த்தைகளைக் கூறி வருகிறார். மக்களை சந்திக்காமல் 
 
இருப்பதும், அரசுப் பணிகளை செயல்படுத்தாமல அவர் (ஜெயலலிதா) இருப்பது தான் அமைதி.
 
1991 முதல் 1996 வரையிலான காலத்தில் மாம் ரூ.1 ஊதியமாகப் பெற்ற அவர் இன்று கோடி கணக்கில் சொத்து சேர்த்துள்ளதாக பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெறும் சொத்து குவிப்பு வழக்கில் பட்டியல் 
 
இடப்பட்டுள்ளது தான் வளம்.
 
மத்திய புள்ளியியல் துறை நிறுவனத்தின் அறிக்கையின்படி திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 13.7 சதவீதமாக இருந்தது. அதிமுகவின் ஆட்சியில் இது 4.1 சதவீதமாக குறைந்து 
 
விட்டது. 2010௧1ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக் காலத்தில் பொருளாதார வளர்ச்சியில் நாட்டின் நான்காவது இடத்தில் தமிழகம் இருந்தது. 2011௧2ஆம் ஆண்டில் தமிழகம் நாட்டில் 8ஆவது இடத்திலும், தற்போது 
 
14ஆவது இடத்திற்கு தமிழகத்தை ஜெயலலிதா கொண்டு சென்றது தான் வளர்ச்சி.
 
மேலும் பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பேசும் போது மக்களைப் பார்த்து செய்வீர்களா? நீங்கள செய்வீர்களா? என்றக் கேள்வியைக் கேட்டு வருகிறார். தமிழக மக்களுக்கு நீங்கள் நன்மை செய்தீர்களா என்ற 
 
கேள்வியை நான் கேட்டவுடன் தற்போது தனது பேச்சை ஜெயலலிதா மாற்றி உண்மையா? இல்லையா? எனக் கேட்டு வருகிறார். முதல்வரின் பாணியில் நானும் இப்போது கேட்கிறேன்.
 
சட்டமன்றத் தேர்தலின் போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் புத்தக சுமையை குறைப்பேன் என ஜெயலலிதா கூறினார். ஆனால் சமச்சீர் கல்வி முறையை ரத்து செய்தார். இது உண்மையா, இல்லையா. 
 
குடும்ப அட்டைதார்களுக்கு விலையில்லா அரிசியை வழங்குவேன் என்றார். தற்போது விலை போகாதா அரிசியை வழங்குகிறார். இது உண்மையா, இல்லையா. 58 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவச 
 
பேருந்து அட்டை வழங்குவேன் என்றார். ஆனால் வழங்கவில்லை, இது உண்மையா, இல்லையா. கடந்த 6 மாதங்களாக முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. இது உண்மையா இல்லையா, 
 
1991 மற்றும் 2001ம் ஆண்டுகளில் ஜெயலலிதா சேது சமுத்திரத் திட்டம் வேண்டும் என்றார். தற்போது  வேண்டாம் எனக் கூறுகிறார். சேது சமுத்திரத் திட்டம் வேண்டும் என சொன்னது உண்மையா, 
 
இல்லையா.
 
ராமர் கோவிலுக்காக கரசேவையை ஜெயலலிதா ஆதரித்தார் என்பது உண்மையா, இல்லையா, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்திற்கு குடிநீர் தேவைக்காக ரூ.636 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர்த் 
 
திட்டத்தை நிறைவேற்றியது திமுக. ஆனால் ஜெயலலிதா தான் இத்திட்டத்தைக் கொண்டுவந்ததாகக் கூறுகிறார். திட்டத்தைக் கொண்டு வந்தது திமுக தான் என்பது உண்மையா, இல்லையா. இலவச கேபிள் 
 
டிவி இணைப்பு தருவேன் எனக் கூறிவிட்டு தற்போது ரூ.120 அதிமுக அரசு வசூல் செய்வது உண்மையா, இல்லையா.
 
பாஜகவுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டதன் காரணமாக தொகுதி பிரிப்பதில் பிரச்சனை என்பதால் கம்யூ.களை கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டது அதிமுக என்பது உண்மையா இல்லையா, வாஜ்பாய் அரசு 
 
காரணமாக இருந்தது அதிமுக என்பது உண்மையா, இல்லையா எனத் தொடர்ச்சியாக பல கேள்விகளைக் கேட்டார்.
 
ஜெயலலிதா தனது பிரச்சாரக் கூட்டத்தில் கேள்விகளை எப்படிக் கேட்டாலும், அதற்கு பதில் சொல்ல நான் தயார் என்றார் ஸ்டாலின்.