வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Muthukumar
Last Updated : வியாழன், 24 ஏப்ரல் 2014 (10:27 IST)

பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவரும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன், இன்று நாகர்கோவிலில் வாக்குப்பதிவு செய்தார்.
 
பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
 
கடந்த 4, 5 நாட்களாக தமிழக மக்களை ஆடு, மாடுகளை விலைக்கு வாங்குவது போல அ.தி.மு.க.வினரும், காங்கிரசாரும் விலைக்கு வாங்கினார்கள். ஆனால் மக்கள் இதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
 
இன்று கூட கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட மேக்கா மண்டபம் பகுதியில் வாக்குசாவடி அருகே நின்று கொண்டு ஆளும் கட்சியினர் ஓட்டுக்கு ரூ.500 கொடுப்பதாவும், அதற்கு போட்டியாக காங்கிரசாரும் பணம் கொடுப்பதாக புகார் வந்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் மற்றும் அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விடுகிறது.மக்கள் இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன சோதனை தீவிரமாக நடந்தது. ஆனால் கடந்த 4,5 நாட்களாக வாகன சோதனையே நடத்தப்படவில்லை. புகார் தெரிவித்தால் அதற்கான ஆதாரத்தை நீங்களே கொண்டு வாருங்கள் என்று சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
 
அதிகாரிகள் காற்றை விட வேகமாக சென்று நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த சம்பவங்களை தடுக்க முடியும். இந்த தேர்தலில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது தேர்தல் ஆணையம் தேவை தானா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 
இவ்வாறு அவர் கூறினார்.