வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2016 (07:07 IST)

திமுக ஆட்சியில் லாரி ஓட்டுனர்களின் நலன் பாதுகாக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சியில் லாரி ஓட்டுனர்களின் நலன் பாதுகாக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சியில் லாரி ஓட்டுனர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
 

 
"நமக்கு நாமே" பயணத்தின் ஒரு பகுதியாக, சென்னை, மதுரவாயலில் லாரி மற்றும் டிரக் ஓட்டுனர்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உரையாடினார்.
 
அப்போது, தினசரி தாங்கள் எதிர்கொண்டு வரும் துயங்களை அவர்கள் மு.க.ஸ்டாலினிடம் பகிர்ந்து கொண்டனர்.  போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நெடுஞ்சாலைகளில் தரும் அளவுக்கதிகமான தொல்லைகள் குறித்து புகார் தெரிவித்தனர்.
 
மேலும், அவர்களது சரக்கு வாகனங்கள் தொடர்ந்து செல்லவும், அதிகாரிகளால் தடுத்து நிறுத்தி வைக்கப்படாமல் இருக்கவும், இடைவிடாமல் ஆங்காங்கே உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
 
மேலும், லாரி ஓட்டுனர் உரிமங்களை எடுக்க 8 ஆம் வயது வரை படித்திருக்க வேண்டும் என்று ஏற்படுத்தியுள்ள விதியை தளர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
 
அதிமுக அரசிடம் தங்களுக்கு நல வாரியம் அமைத்து தர வேண்டும் என பலமுறை தொடர்ந்து வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
 
இறுதியில், மைக் பிடித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக அரசு பொறுப்பேற்றதும் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு, லாரி ஓட்டுனர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்தார்.