வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Muthukumar
Last Updated : ஞாயிறு, 30 மார்ச் 2014 (11:29 IST)

சாதி வெறியைத் தூண்டியதாக அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு!

சாதி மோதலை உருவாக்கும் விதமான வீடியோக்கள் மற்றும் பேச்சுகள் அடங்கிய சிடிக்களை தரமபுரி தொகுதியில் வினியோகித்ததாக தர்மபுரி போலீசார் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். தவைர மேலும் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
 
அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இருவர் கடந்த ஆணு சாதி மோதல் ஏற்பட்ட மரக்காணம் மற்றும் நாயக்கன்கோட்டை ஆகிய பகுதிகளில் சாதி வன்முறியைத் தூண்டும் சிடி-க்களை வினியோகித்தனர். சில கிராமங்களில் இவ்வாறு வினியோகிக்கப்பட்ட சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 

இது குறித்து தாசில்தார் புகார் அளிக்க போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. அதாவது 4 முக்கிய சட்டப்பிரிவுகளின் கீழ் அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
பா.ம.க. மாநில துணைச் செயலாளர் சரவணன், மாவட்ட செயலாளர் அரசாங்கம் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
வன்னியர்களுக்கும் தலித் மக்களுக்கும் இடையே மோதலை உருவாக்கும் விதமான உள்ளடக்கங்கள் கொண்ட சிடிக்களை வெளியிடவேண்டாம் என்று போலீஸ் துறை எச்சரித்துள்ளது.
 
வழக்கம் போல் அன்புமணி இது பொய் வழக்கு என்றும் இதனை சட்ட ரீதியாகச் சந்திப்பேன் என்றும் கூறியுள்ளார்.
 
இந்த வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இளவரசந்திவ்யா காதல் விவகாரத்திற்குப் பிறகே வன்னியர், தலித் மோதல்கள் வன்முறையாக மாறிவருவது குறிப்பிடத்தக்கது.