வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2016 (04:35 IST)

கிராம தபால் நிலைய ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

கிராம தபால் நிலைய ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறை வேண்டும் என ஜி.கே.வாசன் வலியறுத்தியுள்ளார்.
இது குறித்து, தாமக தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இந்தியாவில் சுமார் 1 லட்சத்து 52 ஆயிரம் தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், கிராம தபால் நிலைய ஊழியர்களாக 2 லட்சத்து 92 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் கிராம தபால் நிலைய ஊழியர்களாக வேலை செய்து வருகிறார்கள்.
 
இதில், கிராமப் புற அஞ்சல் நிலையங்களில் பணிபுரியும் 90 சதவீதம் கிராம அஞ்சல் நிலைய ஊழியர்கள் பல ஆண்டுகாலமாக, பணி நிரந்தரம், நிரந்தர பணியாளர்களுக்கு உள்ள அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும், பணப்பயன், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றக் கோரி போராடி வருகின்றனர். 7ஆவது ஊதியக் குழுவில் இவர்களது பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருப்பது கவலையில் ஆழ்த்தியுள்ளது.
 
எனவே, கிராம தபால் நிலைய ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று, அதனை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.