வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya
Last Updated : புதன், 3 ஆகஸ்ட் 2016 (11:40 IST)

மலேசியாவில் இருந்து கடத்தப்பட்ட 3,000 வாஸ்து ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

மலேசியாவில் இருந்து கடத்தப்பட்ட 3,000 வாஸ்து ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 ஆயிரம் வாஸ்து ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை கடத்தி வந்த வாலிபரை கைது செய்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.



சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹபீப் என்பவரின் உடைமைகளை ‘ஸ்கேனிங்’ செய்தனர்.

அவரது பெட்டிகளில் இருந்த பொருட்கள் ஊர்ந்து செல்வதுபோல் இருந்தது. இதையடுத்து அந்த பெட்டிகளை பிரித்து பார்த்தபோது அதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 3,000–க்கும் மேற்பட்ட ஆமைகள் இருந்தன. இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சிறிய வகை சிவப்பு நிற ஆமைகள் ஆகும். இவை மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள நீர்நிலைகள், வனப்பகுதிகளில் இருக்கும். இவற்றை சென்னை கொண்டு வந்து மீன்தொட்டிகளில் வைப்பதற்காக வாஸ்து ஆமைகள் என விற்பனை செய்யப்படுகிறது. ஆமைகளை மீண்டும் மலேசியாவிற்கு செல்லும் விமானத்தில் திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது’ என்றனர்.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்