1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 18 நவம்பர் 2018 (11:12 IST)

7000 மின்கம்பங்கள் சேதம் –இருளில் தத்தளிக்கும் மக்கள்!

நேற்று முன் தினம் கரையைக் கடந்த கஜா புயல் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கடுமையான சேதத்தை விளைவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் துல்லியமான கணிப்பாலும், அரசின் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலலும் கஜா  பெரிய அளவிலான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை புயலுக்கு 36 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சமும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய்யும் நிவாரணம் அளிக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும் தங்கள் கால்நடைகள் மற்றும் பயிர்களை இழந்துள்ள இழந்துள்ள விவசாயிகளுக்கான நிவாரணப் பணிகளும் விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒரு புதிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நேற்று முன் தினம் காரையைக் கடந்த கஜா புயலால் விடிய விடிய கொட்டிய மழையாலும் சூறாவளிக் காற்றாலும் பேராவூரனி மற்றும் அதிராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 700 மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் மின் கம்பிகள் அறுந்துள்ள நிலையில் பேராவூரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.