1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 8 டிசம்பர் 2017 (13:07 IST)

ஐ.டி வேலையை விட்டுவிட்டு, கீரை விற்கும் மதுரை இளைஞர்

மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் பார்த்துக் கொண்டிருந்த ஐ.டி வேலையை உதறித் தள்ளிவிட்டு தற்பொழுது ஆப் மூலம் கீரை விற்று வருகிறார்.
மதுரையை சேர்ந்த ராம்பிரசாத், தனது இன்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு, பல வருடங்களாக ஐ.டி துறையில் வேலை பார்த்து வந்தார். நிறைய சம்பாதித்தும் நிம்மதி இல்லாததாலும், ஸ்ட்ரெஸ் மற்றும் உடல்ரீதியாக பல பிரச்னைகளை  சந்திக்க நேரிட்டதாலும், இது நமக்கு சரிபட்டு வராது என நினைத்த ராம்பிரசாத்  தன் வேலையை விட்டு விட்டு, தனது நிலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி கீரையை வளர்க்க ஆரம்பித்தார். எதிர்பாராத அளவிற்கு அமோக விளைச்சல் கிடைத்தது.
 
இதை மக்களிடையே கொண்டு செல்வதற்கு ஆப் ஒன்றை உருவாக்கினார். மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் தற்பொழுது கோவை சாய்பாபா காலனியில் கீரைக்கடை டாட் காம் என்ற பெயரில் கீரை கடை நடத்தி வருகிறார். இயற்கையான முறையில் கீரைகள் பயிரிடப்படுவதாலும், நிறைய கீரை வகைகள் கிடைப்பதாலும் இந்த கடைக்கு மக்களின் வருகையும் வரவேற்பும் அதிகரித்துள்ளது.