வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : சனி, 12 ஏப்ரல் 2014 (18:59 IST)

இடஒதுக்கீடு வேண்டாம் என்றால் பாஜகவிற்கு வாக்களியுங்கள் - ப.சிதம்பரம்

இடஒதுக்கீடு வேண்டாம் என்றால் பாஜகவிற்கு வாக்களியுங்கள் என்று ஆரணி மணிகூண்டு அருகில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து வெள்ளிக்கிழமை இரவு நிதியமைச்சர் ப.சிதம்பரம் இவ்வாறு பிரச்சாரம் செய்தார்.
 
ஆரணி மணிகூண்டு அருகில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து பேசியதாவது:-
 
இத்தேர்தல் மத்தியில் நிலையான ஆட்சி அமைக்கும் தேர்தல் ஆகும். ஆனால் ஊடகங்கள் 4 முனை போட்டி என்று கூறுகிறது. மத்தியில் காங்கிரஸ், பாஜகவும்தான் போட்டி. இது இருமுனை போட்டி ஆகும். அதிமுக, திமுக கட்சிகளுக்கு ஓட்டு போட்டு தங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள். இரண்டு கட்சிகளும் தமிழ்நாட்டின் எல்லையை தாண்டி போகமுடியாது. 35 ஆண்டுகள் திராவிட கட்சிகள் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து மத்தியில் பதவி சுகம் அனுபவித்தனர். எல்லா கட்சிகளிலும் நிறை, குறைகள் உள்ளது. வாஜ்பாய் நல்லவர்தான். அவரது கட்சி பாஜக நல்லது செய்யவில்லை.
 
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை அமைக்காவிட்டால் பாஜக தான் ஆட்சியை அமைக்கும். பின்னர் அந்த ஆட்சியை அகற்ற கடினமாக போராட வேண்டும். இந்திய நாட்டை இளைஞர்கள் ஆளவேண்டும். எனவேதான் காங்கிரஸில் அதிகமான இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளோம். பாஜக தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு குறித்து எந்த வித அறிவிப்பும் இல்லை. தமிழக மக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்றால் பாஜகவிற்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.
 
இக்கூட்டத்தில் ஆரணி எம்.பி கிருஷ்ணசாமி, மாவட்டதலைவர் வசுந்தராஜ், கட்சி நிர்வாகிகள் கருணாமூர்த்தி, பி.கே.ஜி.பாபு, அருணகிரி, அண்ணாமலை, பிரசாந்த், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஜெ.பொன்னையன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.