Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

யுவன் கார் காணாமல் போனதா? காமெடியில் முடிந்த கம்ப்ளைண்ட்

Last Modified புதன், 4 ஏப்ரல் 2018 (08:47 IST)
இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் ஆடி கார் காணாமல் போனதாக நேற்று காவல்நிலையத்தில் யுவன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த காரை அவரது டிரைவரே திருடியிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது கார் டிரைவரின் செல்போன் சிக்னல் யுவன்ஷங்கர் ராஜா வீடு அருகிலேயே இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் யுவனின் வீட்டில் விசாரணை செய்தபோது வழக்கமாக நிறுத்தும் இடத்தில் கார் இல்லை என்பதாலும் கார் டிரைவர் போனை எடுக்கவில்லை என்பதாலும் புகார் அளித்ததாக தெரிவித்தனர்

இந்த நிலையில் அதே அபார்ட்மெண்டின் இன்னொரு கார் பார்க்கிங்கில் சென்று பார்த்தபோது அங்கு யுவனின் கார் இருந்தது. மேலும் காரின் அருகிலேயே டிரைவர் தூங்கி கொண்டிருந்தார். அவரை எழுப்பி விசாரணை செய்தபோது வழக்கமாக கார் நிறுத்தும் இடத்தில் வேறொரு கார் நின்றிருந்ததால் இங்கே நிறுத்தியதாகவும், அசதியாக இருந்ததால் தூங்கிவிட்டதாகவும், செல்போனில் சார்ஜ் இல்லாததால் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டதாகவும் கூறினார்.

பின்னர் புகார் கொடுத்த யுவனின் தரப்பு அசடு வழிந்ததை அடுத்து போலீசார் கடுப்புடன் திரும்பி சென்றனர். எப்படியோ யுவனின் கார் கிடைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :