சாவியை போலீசார் பறித்ததால் அடையாறு ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை

Last Modified திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (11:52 IST)
சென்னையில் இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் சென்று கொண்டிருந்த இளைஞரை மடக்கிய போலீசார், அந்த வாகனத்தின் சாவியை எடுத்து கொண்டார். இதனால் அதிர்ச்சி யும் ஆத்திரமும் அடைந்த அந்த இளைஞர் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை அடையாற்றில் குதித்த வாலிபரின் பெயர் ராதாகிருஷ்ணன் என்பதும், அவர் குடிபோதையில் இருந்தது உண்மைதான் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் ராதாகிருஷ்ணனின் உடலை தேடும் பணி முடுக்கிவிடப்பட்ட நிலையில் அவரது உடல் கரை ஒதுங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :