Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

144 தடை விதிக்கப்பட்ட மெரினாவில் வாலிபர் படுகொலை - அதிர்ச்சியில் போலீசார்


Murugan| Last Modified வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (14:54 IST)
சென்னை மெரினா கடறகரையில் வட மாநில வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
ஜல்லிக்கட்டு வேண்டி ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சென்ன மெரினா கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு முன்புறம் ஒன்று கூடி 7 நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தினர். அதன் பின் அந்த போராட்டம் போலீசாரால் கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடற்கரையில் ஒட்டியிருந்த பகுதிகள் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் வெடித்தது.
 
எனவே, மாணவர்கள் மீண்டும் கடற்கரையில் போராட்டம் நடத்தகூடாது என்பதற்காக, தமிழக போலீசார் அங்கு 144 தடை உத்தரவை அமுல்படுத்தியுள்ளனர்.  அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், மெரினா கடற்கரையில், வட மாநில இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இன்று காலை அவரது உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.  144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள கடற்கரையில், வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :