வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 6 ஜூலை 2015 (18:17 IST)

’ஆம்பூர் கலவரம்’ பவித்ராவிற்கு காதலியின் நினைவாக உதவியதாக வாலிபர் தகவல்

ஆம்பூர் கலவரத்திற்கு பவித்ராவிற்கு காதலியின் நினைவாக உதவியதாக அடைக்கலம் கொடுத்து உதவிய வாலிபர் தகவல் அளித்துள்ளார்.
 
பள்ளிகொண்டா பகுதியை அடுத்த குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (37). இவரது மனைவி பவித்ரா (24). இவர்களுக்கு ரிஷிதா (5) என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த மே மாதம் 24 ஆம் தேதி பவித்ராவை காணவில்லை என அவரது கணவர் பழனி பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
 
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அகமது (27) என்பவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அவர் போலீசார் தாக்கியதால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப் படுகிறது. இதனால் ஆம்பூரில் ஜூன் 27 ஆம் தேதி கலவரம் மூண்டது.
 
இந்நிலையில், பவித்ரா செல்போன் எண்ணைக் கொண்டு தேடியதில் அவர் ஆம்பூரைச் சேர்ந்த சிவக்குமார், அரக்கோணத்தைச் சேர்ந்த சரவணன், சென்னை கிண்டியைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோருடன் அடிக்கடி செல்போனில் பேசியிருப்பது தெரியவந்தது. அத்துடன் அரக்கோணம் முகவரிக்கு செல்போன் இணைப்பு பெற்றதும் தெரிய வந்தது.
 
இதையடுத்து அரக்கோணம் காவல் துறையினர் அரக்கோணம் உப்புக்குளம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சரவணன் (23) என்ற வாலிபரை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சுரேந்தர் என்பவர் செல்போனில் இருந்து பவித்ராவுக்கு அடிக்கடி அழைப்பு வந்தது தெரிந்தது.
 
அப்போது அவர் கூறுகையில், “நான் சென்னையில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறேன். கடந்த மே மாதம் இறுதியில் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு, கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றேன். அதே ரெயிலில் பவித்ரா ரெயிலில் சென்னை வரை கண் கலங்கிய படியே வந்தார்.
 
அப்போதே அவரிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ரெயிலில் சக பயணிகள் இருந்ததால் பேச இயலவில்லை. பின்னர் சென்னை சென்ட்ரலில் இறங்கிய பிறகு சொந்த ஊரான திண்டுக்கல் செல்ல கோயம்பேடு பஸ் நிலையம் சென்றேன். அங்கு பவித்ரா தவித்து கொண்டிருந்தார்.
 
ரெயிலில் பார்த்த பெண் இங்கு நள்ளிரவில் நிற்கிறாரே என்று பேச்சுக் கொடுத்தேன். அப்போது எனக்கு வயது 23 ஆகிறது. என்னுடைய தாய்மாமனுக்கு 42 வயதாகிறது. அவருக்கு என்னை கட்டாய திருமணம் செய்து வைக்க பார்க்கிறார்கள். அந்த திருமணம் எனக்கு பிடிக்காததால் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன் என்றார்.
 
இப்போது எங்கு தங்குவீர்கள் என்று கேட்டதும் அது தான் தெரியவில்லை என்றார். இதையடுத்து அந்த இரவை பஸ்சிலேயே கழிக்க நினைத்து புதுச்சேரிக்கு அவரை அழைத்து சென்றேன். மீண்டும் அங்கிருந்து சென்னை வந்தோம்.
 
நான் தங்கியிருக்கும் அறைக்கு சென்று உடைகளை மாற்றிக் கொண்டு அம்பத்தூரில் பெண்கள் தங்கும் விடுதியில் என்னுடய செலவில் சேர்த்து விட்டேன். மேலும் நண்பர்கள் உதவியுடன் அதே பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலைக்கு சேர்த்தேன். இரவு நேரங்களில் அடிக்கடி போனில் பேசிக் கொள்வோம்.
 
நான் கல்லூரியில் படிக்கும் போது பவித்ரா என்ற பெண்ணை காதலித்தேன். இவர் பெயரும் பவித்ரா என்பதாலும் என்னை கவரும் வகையில் அழகாக இருந்ததாலும் காதலி நினைவாக உதவி செய்தேன். ஆனால், இவரை காவல் துறையினர் தேடுவது எனக்கு தெரியாது.