வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 29 நவம்பர் 2015 (17:20 IST)

மணப்பெண் கருப்பாக இருப்பதால் 20 சவரன் அதிகமாக வரதட்சனை கேட்ட வாலிபர்

மணப்பெண் கருப்பாக இருப்பதாக கூறி, 20 சவரன் அதிகமாக வரதட்சனை கேட்ட வாலிபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
 

 
திருவண்ணாமலை மாவட்ட செய்யாறை அடுத்த திருப்பனமூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் என்பவரது மகன் தமிழ்மணி (29). தமிழ்மணி தனியார் கம்பெனி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
 
இவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஊராட்சி தலைவரின் மகளான 20 வயது இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிச்சயதார்த்தம் கடந்த மாதம் 14ஆம் தேதி நடைபெற்றுள்ளது.
 
அதன்படி, நவம்பர் 22ஆம் தேதி திருமணம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பில் 30 சவரன் நகை தருவதாக கூறியுள்ளனர்.
 
திருமண வேலைகளில் பெண் வீட்டார் தீவிரமாக இருந்த நிலையில், மணப்பெண் கறுப்பாக உள்ளார், எனவே கூடுதலாக 20 சவரன் நகை வரதட்சனையாக தந்தால் தான் திருமணம் முடியும் என மாப்பிள்ளை வீட்டார் தெரிவித்துள்ளனர்.
 
இது குறித்து பெண் வீட்டார் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மாப்பிள்ளையின் உறவினர் விஜயகுமாரை கைது செய்தார்.
 
தலைமறைவாகி விட்ட மாப்பிள்ளை, அவரது தாய், தந்தை மற்றும் உறவினர்களை தேடி வருகின்றனர்.