ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் புகைப்படம் : இளம்பெண் தற்கொலை


Murugan| Last Modified திங்கள், 27 ஜூன் 2016 (16:34 IST)
சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ஒருவர் புகைப்படம் பதிவு செய்ததில், மனமுடைந்த அந்த பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் வசிப்பவர் வினுப்பிரியா. இவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அவரின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தை எடுத்து ஆபாசமாக சித்தரித்து, அவரின் பக்கத்திலேயே ஒரு மர்ம நபர் பதிவு செய்தார்.
 
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுபற்றி தனது குடும்பதினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இது தொடர்பாக மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுபற்றி அவர்கள் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் அந்த மர்ம நபர் மீண்டும் அந்த பெண்ணின் படத்தை மாபிங் செய்து மற்றொரு ஆபாச படத்தை  திவு செய்தார். இதைக்கண்டு மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
புகார் கொடுத்து ஒரு வாரம் ஆகியும் போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி எடுத்திருந்தால் வினுப்பிரியா தற்கொலை செய்து கொண்டிக்க மாட்டார் என்றும், குற்றவாளியை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் அவரது குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். 
 
வினுப்பிரியாவின் அண்ணன் கூறுகையில் “10 நாட்களுக்கு முன்பே, என் தங்கையின் பேஸ்புக் பக்கத்தை முடக்க சொல்லி கூறினோம். ஆனால், அவர் இறந்த பிறகு அதை செய்துள்ளனர்” என்று வேதனையுடன் கூறினார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :