1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: திங்கள், 25 ஜூலை 2016 (13:42 IST)

செஞ்சிக் கோட்டையில் இளம்பெண்ணின் பிணம்

செஞ்சிக் கோட்டையில் இளம்பெண்ணின் பிணம்

செஞ்சிக் கோட்டையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் பிணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


 
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள ராஜாதேசிங்கு கோட்டை மிகவும் பழமைவாய்ந்ததது. இது சுற்றுலா தலமாக விலங்குகிறது. இங்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும். நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்களில் சிலர் அங்கு ராஜகிரி கோட்டையில் உள்ள கல்யாணமகால் பின்புறம் சென்றனர். அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து கோட்டை ஊழியர்களிடம் தெரிவித்தனர். ஊழியர்கள் கல்யாணமகாலுக்கு பின்புறம் உள்ள மலைப் பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு நிர்வாணநிலையில் இளம் பெண் பிணம் கிடந்தது. இதுகுறித்து செஞ்சி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விழுப்புரம் தடயவியல் நிபுனர் சண்முகம் வந்து பார்வையிட்டு தடயங்களை சேகரித்தார். அப்பெண்ணின் பிணத்தை காவல்துறையினர் கைப்பற்றி செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து, அப்பகுதியில், காணாமல் போன பெண்களின் பட்டியலை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செஞ்சி கோட்டைக்கு டிக்கெட் எடுத்துவிட்டு சுற்றுலா பயணிகள் உள்ளே வருவார்கள். செஞ்சி கோட்டையின் பின்னால் முள் புதர்களும், மலை பகுதியும் உள்ளன. சிலர் கோட்டையின் முன் பகுதி வழியாக வராமல் பின் பகுதி வழியாக உள்ளே நுழைந்து விடுகின்றனர்.

செஞ்சி கோட்டைக்கு கள்ளக்காதலர்களும் அதிகம் வருகிறார்கள். அவர்களை மர்ம கும்பல் தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. செஞ்சி கோட்டையில் கண்காணிப்பு கேமரா இல்லை. இதனால் கோட்டைக்குள் நுழையும் சமூக விரோதிகளை பிடிக்கமுடியாத சூழ்நிலை உள்ளது.

மேலும் கோட்டையில் பாதுகாப்பு இல்லாததால் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. கோட்டைக்கு பின்புறம் உள்ள பகுதிகளில் கம்பிவேலி போட்டு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பிணமாக கிடந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவர் இறந்து 10 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிகிறது. சுடிதார் பேண்டை கிழித்து அந்த பெண்ணின் கைகால்கல் கட்டப்பட்டிருந்தன. எனவே அந்த பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.