Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

2 திருமணம் செய்தவருடன் இளம்பெண் கள்ளக்காதல் - கர்ப்பமாக்கி கழற்றிவிட்டு வாலிபர்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: ஞாயிறு, 8 ஜனவரி 2017 (17:12 IST)
திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி இளம்பெண் காதலித்து கர்ப்பமாக்கி கழற்றிவிட்ட வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளார்.

 

சென்னை மயிலாப்பூரை அடுத்த நொச்சிக் குப்பத்தை சேர்ந்தவர் வினோத் (36). வினோத்திற்கு திருமணமான சில மாதங்களிலேயே, அவரது மனைவி இறந்து விட்டார். இதையடுத்து வினோத் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

வினோத்திற்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வினோத்திற்கும் அவரது இரண்டாவது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மனைவி தனது குழந்தையுடன் அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.

இதற்கிடையில், வினோத் அதே பகுதியைச் சேர்ந்த சுலோச்சனா என்ற இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளார். மேலும், இருவரும் பல நேரங்களில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதில் இளம்பெண் சுலோச்சனா மூன்று மாதம் கர்ப்பம் அடைந்துள்ளார். இதனால் திருமணம் செய்து கொள்ளும்படி வினோத்தை சுலோச்சனா வற்புறுத்தி உள்ளார். ஆனால், வினோத் தொடர்ந்து மழுப்பிவர, அதிர்ச்சியடைந்த சுலோச்சனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்துகொண்ட காவல் துறையினர் வினோத்தை கைது செய்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :