நண்பணின் தலையை வெட்டி காவல்நிலையத்தில் வீசிய நண்பர்கள் (அதிர்ச்சி வீடியோ)
கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிசாவடி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் முன்பு, நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், கொலை செய்யப்பட்ட ஒரு இளைஞனின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்குள் வீசி விட்டு சென்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ வெளியாகி தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளைஞர் புதுச்சேரிக்கு அருகில் உள்ள பாகூரை சேர்ந்த சுவேதன்(17) என்பது தெரியவந்துள்ளது.
சுவேதனும், அவரின் நண்பர்கள் வினோத், தாஸ், சர்மா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அந்த பகுதியில் சில கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில், போலீசாரிடம் சிக்கிய சுவேதன், அவருடையை நண்பர்களை அடையாளம் காட்டி அவர்களை போலீசில் சிக்க வைத்துள்ளார். இதனால் கோபமடைந்த அவரின் நண்பர்கள் பினாச்சிக்குப்பம் பகுதியில் அவரைக் கொன்று, உடலை அங்கே போட்டுவிட்டு, தலையை மட்டும் காவல் நிலையத்தில் எரிந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்துள்ளனர்.