வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 26 அக்டோபர் 2016 (19:00 IST)

வைகோ என்னாச்சி வைகோ : சிநேகன் பாணியில் வைகோவை கலாய்த்த கவிஞர் சல்மா

வைகோ என்னாச்சி வைகோ : சிநேகன் பாணியில் வைகோவை கலாய்த்த கவிஞர் சல்மா

திமுக அழைப்பு விடுத்த அனைத்து கட்சி கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள தலைவர்களை கலந்து கொள்ளவிடாமல், வைகோ தடுத்தார் என்று பரவலாக கூறப்படுகிறது. 


 

 
இந்நிலையில், திமுகவை சேர்ந்த பிரபல எழுத்தாளரும், கவிஞருமான திருமதி ராஜாத்தி சல்மா தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கவிதை வெளியிட்டுள்ளார்.
 
சமீபத்தில், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா பற்றி கவிஞர் சிநேகன் எழுதிய கவிதை ஸ்டைலில் இருந்தது அந்த கவிதை... யாரோ எழுதியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதை எழுதியது அவர்தான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
வைகோ என்னாச்சி வைகோ...
 
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு 
அனைத்து கட்சி கூட்டம் பார்த்து அலறுறீங்க 
அடி வயிற்றில் கை வைத்து பதறுறீங்க 
விவசாயிக்காக கூட்டம் கூட்டுவது தப்பா வைகோ 
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு
 
பச்சை தலைப்பாகையும் கருப்பு தூண்டுமாய் அலைந்தீர்கள் 
பருப்பு வேகாமல் பாதியிலேயே கழட்டினீர்கள் 
வல்வெட்டித்துரைப்பற்றி பேசினீர்கள் அங்கே 
வாழாவெட்டியாய் பலரை ஆக்கினீர்கள் 
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு
 
பிரபாகரனை பற்றி பேசினீர்கள் 
பரிதாபமாக அவரை மாற்றினீர்கள் 
கூடங்குளம் பற்றி கொந்தளித்தீர்கள் 
கூட நிற்காமலேயே வந்துவிட்டீர்கள் 
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு
 
மோடி கூட நின்னு ஜோரா முழங்கினீர்கள் 
மோசம் போயி விட்டதாக புலம்புனீர்கள் 
மோஷன் போன சிறுவனைப்போல கதறுறீங்க 
வேஷம் போட்ட கோமாளியாய் பதறுறீங்க 
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு
 
விஜயகாந்தை முதலமைச்சரான அறிவிச்சீங்க 
இருக்கும்வரை ஜெயாதான் முதல்வர் என்று கூவுறீங்க 
எதிர்க்கட்சி தலைவரா இருந்தவரை 
எதிர்காலம் இல்லாமல் ஆக்கிடீங்க 
பிரேமலதா பின்னாலே நின்று நீங்க 
பிணம்தின்னி கழுகாக மாறுனீங்க 
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு
 
வாசனையும் கூட்டிவந்து சுத்துனீங்க 
வாசமில்லா மலராக ஆக்கினீங்க 
மோசம் போன வாசனுமே வந்துட்டாரு 
வேஷம் போட்ட நீங்க மட்டும் நிக்கிறீங்க 
கோசம் போட ஆளில்லாம சொக்குறீங்க 
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு
 
சேர்ந்தவங்க அனைவரையும் முடிச்சிடீங்க
செல்லாக்காசா நீங்க இப்ப ஆயிடீங்க 
காலம் போன காலத்துல வேஷம் வேண்டாம் 
கலைஞரின் கரத்தை நீங்க உதர வேண்டாம் 
மன நல கூட்டணியும் தேறாது 
மன உளைச்சல் எந்நாளும் ஆகாது 
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு...