1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 25 ஜூன் 2016 (05:06 IST)

சேலம் அருகே கன்று குட்டிக்கு பால் சுறக்கும் அதிசயம்

சேலம் அருகே பசுமாடு கன்று குட்டிக்கு ஒன்றுக்கு பால் சுறந்து, கன்று குட்டியிடமிருந்து உரிமையாளர் அரை லிட்டர் பால் கறந்துள்ளார். 
 

 

 
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டியை அடுத்த கே.மோரூர் பகுதியை சேர்ந்த விவசாயி வேலு. இவர் விவசாயம் செய்து கொண்டு தனது தோட்டத்தில் 3 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தனது மாட்டின் கன்று குட்டியை வளர்த்து வருகிறார். அது கருத்தரித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு கன்று ஈன்றது. இவர் வளர்த்து வந்த பசு மாடு கன்று பிறந்தவுடன் பசுமாட்டிற்கு இருப்பதை போலவே அதன் மடியும் இருந்து உள்ளது. 
 
ஆரம்பத்தில் இதை அவர் கவனித்தாலும் அதை இவர் கண்டுகொள்ளவில்லை. ஒரு நாள் பசுமாட்டில் பால் கறப்பதற்காக கன்று குட்டியை அவிழ்த்து விட்டார் .கன்று குட்டி அதன் தாய் பசுமாட்டில் பால் குடித்து கொண்டிருந்த போது ஒரு அதிசயம் நடந்தது. .அப்போது  கன்று குட்டியின் மடியிலும் பால் சுரந்து  சொட்டு சொட்டாக  கொட்டியது. இதை பார்த்து அதிசயித்த அவர் கன்று குட்டியின் மடியில் பாலை கறந்து உள்ளார். அப்போது அந்த கன்றுக்குட்டி அரை லிட்டர் பால் கறந்தது.  
 
இது குறித்து வேலு அதே பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை டாக்டரிடம் கூறிஉள்ளார்.  அப்போது கால்நடை டாக்டர் கூறியதாவது; ஹார்மோன் பிரச்சினையால் இது போன்று லட்சத்தில் ஒரு விலங்குக்கு நடக்கும். அதுபோலத்தான் இந்த கன்றுக்குட்டியும் பால் கறக்கிறது. நாளடைவில் அது சராசரி கன்று குட்டியாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.