வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2017 (23:59 IST)

டாஸ்மாக் கடையை கடப்பாறையால் அடித்து நொறுக்கிய பெண்கள்

கடந்த சில வாரங்களாகவே டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பெண்கள் உள்பட பொதுமக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.



 


இந்த நிலையில் சென்னை அருகில் உள்ள குன்றத்தூர்-சோமங்க‌லம் சாலையில், பூந்தண்டலம் சக்திநகரில் புதிய டாஸ்மாக் கடையை அமைக்கும் பணி நடைப்பெற்று வருகின்றது. அந்த இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து வேலை நடந்து கொண்டிருந்தது.

இந்நிலையில்தான் இனிமேலும் பேசிக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்த அந்த பகுதியை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி கடப்பாரை, சம்மட்டியுடன் சென்று, புதிய மதுபானகடைக்கு வைத்திருந்த சட்டரை அடித்து நொறுக்கினர். இதனால் அந்த கட்டிடம் கடுமையாக சேதம் அடைந்தது. மக்களின் எதிர்ப்புக்கு முன்னால் அரசு ஒன்றும் செய்ய முடியாது என்பதற்கு இதுவொரு நல்ல உதாரணம்.