1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 9 ஜூன் 2016 (16:39 IST)

விவாகரத்து கோரி உயர் நீதிமன்றத்தில் பெண் தற்கொலை முயற்சி

சென்னையில், விவாகரத்து வழக்கு இழுத்தடிக்கப்படுவதால் மனமுடைந்த பெண் ஒருவர் உயர் நீதிமன்ற வளாக கட்டிடத்தில் ஏறி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். 


 

 
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ஜெயக்குமார், அவரது மனைவி தனலட்சுமி ஆகிய இருவரும் கருத்து வேறுபாட்டால் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.
 
இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தனலட்சுமியின் கணவர் தரப்பில் இருந்து இழுத்தடிக்கப்பட்டு, வழக்கின் விசாரணை தேதியும் தள்ளிவைக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் நேற்று குடும்ப நல நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வந்திருந்த தனலட்சுமி, கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அவரது விவாகரத்து வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் அவர் மனமுடைந்து தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார்.
 
தனலட்சுமி நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதிக்கப்போவதாக கூறியுள்ளார். இதைக்கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அருகில் இருந்த தீயணைப்பு படை அலுவலகத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் பெரிய வலையை தூக்கிக்கொண்டு வந்தனர்.
 
தனலட்சுமி ஒரு வேலை கீழே குதித்தால் அவரை காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வலையை விரித்தனர். இதற்கிடையில் காவல்துறையினர் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்று தனலட்சுமி பொருமையாக பேச்சு வார்த்தை நடத்தி அவரை பத்திரமாக காப்பாறினர்.
 
தற்கொலை சம்பவம் குறித்து தனலட்சுமியிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், தனலட்சுமி மீது பரிதாபம் அடைந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் மன்னித்துவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.