மதுரை ஆவின் கெஸ்ட் ஹவுஸ்: பலான வீடியோவால் கதிகலங்கிய அதிமுக

Last Modified ஞாயிறு, 23 டிசம்பர் 2018 (12:15 IST)
சமீபத்தில்தான் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா ஆவின் பால் கூட்டுறவு சங்க விவகாரத்தில் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட விவகாரம் சூடு தனிவதற்கு அடுத்து ஒரு எரிமலையே வெடித்திருக்கிறது. வெளியாகியுள்ள பலான வீடியோவால் அதிமுக கதிகலங்கி உள்ளது. 
 
ஆம், மதுரை ஆவின் கெஸ்ட் ஹவுஸில் அதிமுக நிர்வாகிகள் இருவர் அங்கு பணிபுரியும் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது ஆவின் பணியாளர் கூட்டுறவு சங்க தலைவர் பாண்டி மற்றும் மதுரை அண்ணா தொழிற்சங்க மாநில இணை செயலாளராக உள்ள பரமானந்தம் என கூறப்படுகிறது. 
 
இவர்கள் இருவரும் ஆவின் அலுவலகத்தில் தற்காலிகமாக பணிபுரியும் பெண்களிடம் பணி நிரந்தரமாக்கி விடுகின்றோம் என கூறி ஆவின் அலுவலகத்தின் கெஸ்ட் அவுஸில் உல்லாசம் அனுபவிப்பதாக செய்திகள் வீடியோவுடன் வெளியாகியுள்ளது. 
 
சிறு வயது பெண்கள் உட்பட பல பெண்களுடன் இருவரும் மாறி மாறி உல்லாசமாக இருப்பது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் ஆவின் பால் பொது மேலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனராம். 
 
ஆனால், இது பழைய வீடியோ என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வீடியோ விவகாரம் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :