Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கள்ளக்காதலி கொடுத்த பாலியல் தொல்லை; போட்டு தள்ளிய கள்ளக்காதலன்


Abimukatheesh| Last Updated: சனி, 18 மார்ச் 2017 (13:07 IST)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாலியல் தொல்லை கொடுத்த பெண்னை அவரது கள்ளக்காதலன் தொல்லை தாங்க முடியாமல் கொலை செய்தார்.

 

 
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த லட்சுமி(47) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் கார்த்திகேயன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. லட்சுமி கணவனை இழந்து தனியாக வசித்து வருகிறார். கார்த்திகேயன் கொஞ்சம் கொஞ்சமாக லட்சுமியுடன் இருந்த உறவை குறைத்துக்கொண்டு வந்துள்ளார். 
 
ஆனால் லட்சுமி அவரை விடாமல் தொடர்ந்து உறவு ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் பணம் கேட்டும் தொந்தரவு செய்துள்ளார். ஒருநாள் கார்த்திகேயன் தனது நண்பர்களுடன் இருக்கும்போது, லட்சுமி சென்று தகராறு செய்துள்ளார்.
 
இதனால் கார்த்திகேயன் மிகுந்த மன வருத்ததில் இருந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று லட்சுமி தனது கணவரின் பி.எப் பணம் எடுக்க செல்ல வேண்டும் என கார்த்திகேயனை அழைத்துள்ளார். கார்த்திகேயன் லட்சுமியை தனது காரில் அழைத்து சென்றுள்ளார். காரில் செல்லும்போது லட்சுமி, கார்த்திகேயனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
 
இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன் லட்சுமியை காரில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தாக்கியுள்ளார். அதோடு புடவையை கொண்டு லட்சுமி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து உயிரிழந்த லட்சுமியின் உடலை தரைபாலத்தின் கீழே வீசிவிட்டு கார்த்திகேயன தப்பி சென்றார்.
 
இதையடுத்து காவல்துறையினர் விசாரணை செய்ததலில் கார்த்திகேயன் பிடிப்பட்டார். மேலும் கைதுச் செய்யப்பட்ட கார்த்திகேயனிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :