வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 8 டிசம்பர் 2016 (15:21 IST)

நான் ஜெயலலிதா பேசுகிறேன்: ஒரு பெண்ணின் நெகிழ்ச்சி அனுபவம்!

நான் ஜெயலலிதா பேசுகிறேன்: ஒரு பெண்ணின் நெகிழ்ச்சி அனுபவம்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெண்களின் பாதுகாப்பிற்கு பெரும் முக்கியத்துவம் கொடுப்பவர் என பலருக்கும் தெரியும். பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். அவருடன் தனக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியூட்டம் அனுபவத்தை ஒரு பெண் பத்திரிக்கையாளர் பகிர்ந்துள்ளார்.


 
 
பெண் பத்திரிக்கையாளரின் அனுபவம்:-
 
சென்னையில் ஒருமுறை தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பேட்டி எடுப்பதற்காக நான் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றிருந்தேன். அவரது கார் வந்த உடன் முந்தி சென்று அவரிடம் பேட்டி எடுக்க முயன்றேன். அப்போது எனது அடிவயிற்றில் ஏதோ ஒரு வலி ஏற்பட்டது.
 
என் கண்கள் உடனே என்னை அறியாமல் கலங்கின, காரின் கீழே அமர்ந்திருந்த அவரின் செக்யூரிடிகளில் யாரோ ஒருவர் என்னிடம் தவறாக நடக்கிறார் என்பது எனக்கு புரிந்ததுவிட்டது. ஆனால் அது யார் என்பது எனக்கு தெரியவில்லை. கூட்டமாக இருந்ததால் வலியை தாங்கிக்கொண்டு நான் அதைப்பற்றி வாய் திறக்கவில்லை.
 
பேட்டி முடிந்த உடன் அவருடைய கார் நகர்ந்தது. பின்னர் வலியால் துடித்த எனக்கு தோழிகள் ஆறுதல் கூறி என்னுடைய வீட்டில் விட்டனர். அன்று இரவு 11 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது, அதில் பேசிய ஜெயலலிதாவின் தனி செயலர், இன்று பேட்டியின் போது நீங்கள் அழுததாக அம்மா கூறினார் என்ன நடந்தது என கேட்டார்.
 
அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் நான் நடந்ததை கூறினேன். பின்னர் அடுத்த நாள் மீண்டும் தொலைப்பேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பாதுகாப்புகாக வந்த 30 செக்யூரிட்டிகளையும் அம்மா வெளுத்து வாங்கினார், ஆனால் அது யார் என்று தெரியவில்லை, ஒரு நிமிடம் இருங்கள் என கூறினார்.
 
உடனே ஹெலோ எப்படி இருக்கிறாய் என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது. நானும் ஏதோ பதிவு குரல் என நினைத்து மௌனமாகவே இருந்தேன். மீண்டும் ஏன் மௌனமாக இருக்கிறாய் என்று கேட்டவுடன் தான் தெரிந்தது அது அம்மாவின் குரல் என்று.
 
நீங்கள் சாதாரண மக்களிடம் பேசுவீர்களா என்று நான் கேட்டேன். அதற்கு நான் பேச மாட்டேன் என நீ நினைத்தாயா என்று கேட்டார். பின்னர் நீ ஒரு இளம் பத்ரிக்கையாளர். இப்படி துவண்டு போகக்கூடாது, வாழ்க்கையில் எவ்வளவு தடங்கல்கள் வந்தாலும் அதை எதிர்த்து செல்லு என்று கூறினார்.
 
தேர்தல் பணிகள் உள்ளதால் நான் செல்கிறேன். நான் சொன்னது நினைவிருக்கட்டும் என்று கூறி விடைபெற்றார் என அந்த பெண் பத்திரிக்கையாளர் தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.