ஜெயலலிதா சமாதிக்கு சென்ற பெண்ணின் நிலமை ஐயோ பரிதாபம்!

ஜெயலலிதா சமாதிக்கு சென்ற பெண்ணின் நிலமை ஐயோ பரிதாபம்!


Caston| Last Modified புதன், 28 டிசம்பர் 2016 (09:38 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மாரணமடைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

 
 
இதனையடுத்து அவரது சமாதியை தினமும் தமிழகம் முழுவதிலும் இருந்தும் பலர் கூட்டம் கூடமாக வந்து பார்த்து செல்கின்றனர். இதனால் எம்ஜிஆரி சமாதி உள்ள அந்த இடத்தில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த பெண் ஒருவர் அந்த வளாகத்தில் இருந்த புல் தரையில் நடந்து வந்துள்ளார். அப்போது அதில் மின்சார ஒயர் ஒன்று கிடந்ததை கவனிக்காமல் அதை மிதித்துள்ளார். இதனால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
 
உடனடியாக காவல்துறையினர் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
புல் தரையில் மின்சார ஒயரை பாதுகாப்பில்லாமல் போடப்பட்டிருப்பதால் அங்கு அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :