வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2016 (16:42 IST)

ஜெயலலிதா குணமடைய பால்குடம் எடுத்த பெண் மரணம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைய வேண்டி பால் குடம் எடுத்தபோது பெண் ஒருவர் மூச்சுத் திணறி மரணமடைந்து உள்ளார்.
 

 
அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 4 வாரங்களுக்கு மேலாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி ஏராளமான கோவில்களில் யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர்.
 
மேலும், அப்பல்லோ மருத்துவமனை வாசலிலும் தொடர்ந்து பூஜை, யாகம் மற்றும் பிரார்த்தனைகள் அதிமுகவின் பல்வேறு பிரிவுகள் சார்பில் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி திருவண்ணாமலையில் பச்சையம்மன் கோவிலில் 10 ஆயிரம் பெண்கள் பால்குடம் எடுத்தனர். அதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏரளமான பெண்களை கலந்து கொண்டனர்.
 
இதனால், கோவிலுக்குள் கடும் நெரிசல் ஏற்பட்டது. அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் மயக்க மடைந்துள்ளனர். அவர்கள்  திருவண்ணாமலை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கமலாம்பாள் (60) என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.