Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அண்ணா சாலையில் ஆபாச நடனம் - கண்டு கொள்ளாத போலீசார் (வீடியோ)


Murugan| Last Modified செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (13:07 IST)
சென்னை  அண்ணாசாலையில் உள்ள ஒரு கலாச்சார மையத்தில் பெண்களை வைத்து ஆபாச நடனத்தை சிலர் நடத்தி வருகின்றனர்.

 

 
இது தொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதாவது, அண்ணாசலையில் உள்ள ஒரு பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இந்த ஆபாச நடனம் நடக்கிறது. இதற்கு கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்படுகிறது. 
 
அங்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒலிக்கும் பாடல்களுக்கு பெண்கள் நடனம் ஆடுகின்றனர். அப்போது அவர்கள் மீது பார்வையாளர்கள் பணத்தை வாரி இறைக்கின்றனர். அங்கு மதுவும் விற்பனை செய்யப்படுகிறது.
 
வெளியே கலாச்சார மையம் என்ற பெயர் பலகை உள்ளது. ஆனால், உள்ளே பெண்கள் ஆபாச நடனம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். நள்ளிரவு நெருங்கியவுடன், போதையேறிய ரசிகர்களுடன் நடன மங்கைகள் ஒன்றாக கூடி குத்தாட்டம் போடுகின்றனர்.
 
பணத்தை பெற்றுக்கொண்டு போலீசார் இதை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.  
 


இதில் மேலும் படிக்கவும் :