Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வயிற்றில் குத்தப்பட்ட ஈட்டியுடன் மருத்துவமனை வந்த பெண்: கணவனின் போதை வெறியால் பரிதாபம்


sivalingam| Last Modified ஞாயிறு, 14 மே 2017 (23:39 IST)
திருச்சி அருகே போதை கணவன் ஒருவர் தனது மனைவியின் வயிற்றில் ஈட்டியால் குத்தியால் வலியால் அலறிக்கொண்டே மருத்துவமனையில் அட்மிட் ஆன பெண்ணை மருத்துவர்கள் மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் காப்பாற்றியுள்ளனர்.


 


திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டையைச் சேர்ந்தவர் பழனியாண்டி என்பவர் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவி மீனாவை துன்புறுத்தி கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று இரவு அவர் முழு போதையுடன் வீட்டுக்கு வந்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட மனைவி மீனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பழனியாண்டி பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் அங்கிருந்த சிறிய ஈட்டியால் மனைவி மீனாவின் வயிற்றில் குத்தினார்

பழனியாண்டி குத்திய ஈட்டி மனைவியின் இடுப்பு பகுதியை துளைத்துக்கொண்டு மறுபக்கம் வெளியே வந்தது. வலியால் அலறிய மீனாவை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் ஈட்டியை மீனாவின் வயிற்றில் இருந்து வெளியே எடுத்தனர். தற்போது போலீசார் பழனியாண்டியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :