வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 22 அக்டோபர் 2016 (11:22 IST)

இடைத்தேர்தலில் விஜயகாந்த் போட்டி?

இடைத்தேர்தலில் விஜயகாந்த் போட்டி?

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தேதிமுக தலைவர் விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என அவரது கட்சியினர் விருப்பப்படுவதாக தகவல்கள் வருகின்றன.


 
 
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் நவம்பர் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிமுக, திமுக போன்ற பிராதான கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் தேமுதிக இந்த தேர்தலை சந்திக்குமா என சரியாக தெரியவில்லை.
 
ஆனால் ரகசியமாக தேமுதிகவில் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக கூறப்பட்டுகிறது. அந்த கட்சியை சேர்ந்த கரூர், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் விஜயகாந்தை சந்தித்து இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்க வேண்டும் எனவும், திருப்பரங்குன்றத்தில் விஜயகாந்த் போட்டியிட வேண்டும் எனவும் கூறியதாக தகவல்கள் வருகின்றன.
 
கடந்த சட்டசபை தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் களம் இறங்கிய விஜயகாந்த் டெபாசிட்டை இழந்து தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது சொந்த மாவட்டத்தில் அவர் களம் இறங்கி வெற்றி பெற்று சட்டமன்றம் செல்ல அவரது கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.