1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 13 ஜூன் 2019 (08:11 IST)

அதிமுக ஒற்றைத்தலைமை: ரஜினி எண்ட்ரிக்கு இதுதான் சரியான நேரமா?

அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றைத்தலைமை வேண்டும் என்று சில எம்.எல்.ஏக்கள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக பொதுச்செயலாளர் பதவிக்கு ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. ஆனால் அதிமுகவில் உள்ள சிக்கல் என்னவெனில் ஒற்றை தலைமை பதவியேற்கும் அளவிற்கு ஆளுமை உள்ள தலைவர்கள் அங்கு இல்லை என்பதுதான். ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவருமே ஆளுமையுள்ள தலைவர்களா? என்ற சந்தேகம் இன்னும் அதிமுக தொண்டர்களிடையே உள்ளது
 
இந்த நிலையில் அதிமுகவின் ஒற்றை தலைமைக்கு தகுதியானவர்கள் இரண்டே பேர்கள் தான் என்றும் ஒருவர் டிடிவி தினகரன், இன்னொருவர் ரஜினிகாந்த் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
டிடிவி தினகரனை அதிமுகவில் உள்ள பெரும்பாலோர் எதிர்க்கின்றனர். மேலும் சசிகலா மீதான வெறுப்பு இன்னும் அதிமுகவினர்களிடம் இருந்து மட்டுமின்றி பொதுமக்களிடமும் இருந்தும் விலகவில்லை. எனவே தினகரனுக்கு ஒற்றைத்தலைமை கொடுப்பது என்பது சொந்தக்காசில் சூன்யம் வைத்து கொள்வது போன்றது என்பதை ஓபிஎஸ், ஈபிஎஸ் உணர்ந்துள்ளனர். இது நடக்க அனேகமாக வாய்ப்பு இல்லை
 
அடுத்தது ரஜினிகாந்த். ரஜினியின் செல்வாக்கு டெல்லி வரை உள்ளது என்பது அவருக்கு பாசிட்டிவ்வாக இருப்பதால் ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து ரஜினியை தலைமையேற்க சொல்லலாம் என்றும் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் கூறி வருகின்றனர். சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள நிச்சயம் ஒரு பிரபலமான தலைவர் தேவை என்பதாலும், வலிமையான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ஸ்டாலினின் செல்வாக்கு ஆகியவற்றை எதிர்க்க சரியான தேர்வாக ரஜினிகாந்த் இருப்பார் என்றும்  கூறப்படுகிறது அதிமுக தலைமை என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்