1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2016 (19:10 IST)

பாஜக-வுக்கு ஆதரவாக ரஜினிகாந்த்?: தமிழிசை பேட்டி

இன்று கோவையில் பாஜக ஊழியர் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழிசை சௌந்தர்ராஜனிடம், நிருபர்கள் ரஜினி பாஜகவை ஆதரித்து இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்வார என கேள்வி எழுப்பினர்.


 
 
ரஜினி குறித்த நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை, மற்ற கட்சிகளை போலவே எங்கள் கட்சியிலும் திரைப்பட துறையை சேர்ந்த கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் பிரசாரம் செய்வார்கள் என்றார். ஆனால் ரஜினி பிரச்சாரம் செய்வாரா? இல்லையா? என்பதை கூறவில்லை.
 
இந்த பேட்டியின் போது, கூட்டணி குறித்து பல்வேறு யூகங்கள் வெளிவருகிறது. இந்த யூகங்கள் அனைத்தும் பாஜகவின் வியூகங்கள் கிடையாது என்றார். மேலும் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி டுவிட்டரில் தெரிவித்த கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்றார். ரவிசங்கர் மு.க.ஸ்டாலின் இடையேயான சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்.
 
கூட்டணி தொடர்பாக மேலிட தலைவர்கள் கலந்து பேசி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என கூறிய தமிழிசை தனது தந்தையின் நடைபயணாம் குறித்து பேசிய போது, மதுவிலக்கை வலியுறுத்தி குமரி அனந்தன் நடைபயணம் செல்வது நியாயமான கோரிக்கை. அவரது கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றார்.