சசிகலா உறவினர்களால் முதல்வர் ஓபிஎஸ் தாக்கப்பட்டாரா?

சசிகலா உறவினர்களால் முதல்வர் ஓபிஎஸ் தாக்கப்பட்டாரா?


Caston| Last Modified வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (16:23 IST)
தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி கட்டாயப்படுத்தப்பட்டதாக பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இந்நிலையில் ராஜினாமா கடித்தத்தில் கையெழுத்து பெறுவதற்காக சசிகலாவின் உறவினர்களால் ஓபிஎஸ் தாக்கப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

 
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். தான் சசிகலா உறவினர்களால் மிரட்டப்பட்டதாகவும், அசிங்கப்படுத்தப்பட்டதாகவும் கூறினார் பன்னீர்செல்வம்.
 
இந்நிலையில் ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல் அவரை சசிகலா உறவினர்கள் தாக்கியுள்ளார்கள் என்ற தகவலும் பரவி வருகிறது. தான் அவர்களால் தாக்கப்பட்டதாக எங்குமே கூறவில்லை ஓபிஎஸ். ஆனால் ஓபிஎஸ் தாக்கப்படவில்லை என சசிகலா தரப்பில் உள்ள முன்னணி தலைவர்கள் தாங்களாகவே முன்வந்து கூறிவருவது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் தங்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தால் பல உண்மைகளை சொல்ல வேண்டிவரும் என பன்னீர்செல்வம் சசிகலா தரப்பிற்கு எச்சரிக்கை விடுத்திருப்பதும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :