Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அதிரடி ஆட போகும் ஓபிஎஸ்; விட்டுக்கொடுப்பாரா எடப்பாடி பழனிச்சாமி?


Abimukatheesh| Last Updated: புதன், 19 ஏப்ரல் 2017 (15:16 IST)
கட்சியிலிருந்து விலகுவதாக தினகரன் அறிவித்ததை அடுத்து ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்போடு பேச்சுவார்த்தை நடத்த தயார் என கூறியுள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அமைச்சர்களும் ஓபிஎஸ் அணியுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என கூறியுள்ளனர்.

 

 
அதிமுக கட்சியிலிருந்து ஒதுங்கி விட்டதாக டிடிவி தினகரன் பேட்டியளித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ், சசிகலா குடும்ப ஆதிக்கத்திலிருந்து அதிமுகவுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் முதல் வெற்றி கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்போடு பேச்சு வார்த்தை நடத்த தயார் என்று கூறினார்.
 
நேற்று முதல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அமைச்சர்கள் ஓபிஎஸ் அணியுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என்று பேட்டி அளித்து வந்தனர். ஆனால் நேற்று ஓபிஎஸ் அணியினர் இதுகுறித்து எதுவும் பேசாமல் மௌனம் காத்து வந்தனர்.
 
தற்போது பன்னீர்செல்வம் மத்திய அரசின் முழு ஆதரவோடு பலமாக உள்ளார் என அரசியல் பார்வையாளர்கள் கூறிவருகின்றனர். இதனால் அவர் தனது அதிரடி ஆட்டத்தை அதிரடியாக தொடங்குவார் என கூறப்படுகிறது.
 
உடைந்த இரு அதிமுக அணிகளும் இணைந்தால் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை விட்டுக்கொடுப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :